ஸ்மார்ட் சிட்டி பணியின்போது புதைவட மின் கம்பி அறுந்தது: அனுமதி பெறாமல் குழி தோண்டியது அம்பலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்மார்ட் சிட்டி' பணியின்போது புதைவட மின் கம்பி அறுந்தது: அனுமதி பெறாமல் குழி தோண்டியது அம்பலம்

Added : பிப் 15, 2020
Share
திருப்பூர்:'ஸ்மார்ட் சிட்டி' மேம்பாட்டு பணிகள், புதைவடமாக தொலை தொடர்பு கேபிள் அமைக்கப்படும்போது, மின்வாரியத்திடம் உரிய அனுமதி பெற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருப்பூரில், குறிப்பிட்ட சில இடங்களில் தரைக்கு அடியில் கேபிள், மற்ற இடங்களில், மின் கம்பம் மூலம், 'டிரான்ஸ்பார்மர், பில்லர் பாக்ஸ்' உதவியுடன், மின் வாரியம், மின் வினியோகம் செய்கிறது. இவற்றில்,

திருப்பூர்:'ஸ்மார்ட் சிட்டி' மேம்பாட்டு பணிகள், புதைவடமாக தொலை தொடர்பு கேபிள் அமைக்கப்படும்போது, மின்வாரியத்திடம் உரிய அனுமதி பெற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருப்பூரில், குறிப்பிட்ட சில இடங்களில் தரைக்கு அடியில் கேபிள், மற்ற இடங்களில், மின் கம்பம் மூலம், 'டிரான்ஸ்பார்மர், பில்லர் பாக்ஸ்' உதவியுடன், மின் வாரியம், மின் வினியோகம் செய்கிறது.
இவற்றில், மின்சாரம் செல்வதால், அதிக வெப்பத்துடன் உள்ளன.குறிப்பாக, தரையில், இரண்டடி ஆழம் பள்ளம் தோண்டி, மின் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், 'ஸ்மார்ட் சிட்டி' மற்றும் தொலைதொடர்பு கேபிள்களை புதைவடமாக அமைக்கவும், ரோட்டோரத்தில் குழிகள் தோண்டப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.ஆனால், இந்த பணியின் போது, மின்வாரியத்திடம் உரிய அனுமதி பெறப்படுவது கிடையாது. மாறாக, குழிகள் தோண்டப்படுவதால், மின் கம்பம் அருகில், பதிக்கப்பட்ட மின் கேபிள்கள் வெளியே தெரிகின்றன. ஒரு சில பகுதிகளில், மின் இணைப்பும் துண்டிக்கப்படுகிறது.நேற்று முன்தினம் மாலை, பாரப்பளையம் - ராயபுரம் இடையிலான பாலம் அமைக்கும் பணி நிமித்தமாக, பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்ட போது, புதைவடமாக இருந்த மின்கம்பி அறுபட்டது.உடனே, பணிகள் நிறுத்தப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதேநேரம், சுற்றுப் பகுதியில், சீரமைப்பு பணிக்காக, நான்கு மணி நேரம் மின் வினியோகம் தடைபட்டது.இது குறித்து, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஜவகர் கூறியதாவது:மின் கேபிள்கள், பூமியின் ஆழத்தில் புதைத்து, பராமரிக்கப்படுகிறது.
அதேபோல், பில்லர் பாக்ஸ், டிரான்ஸ்பார்மர் ஆகியவை தெரு ஓரங்களில் அமைக்கப்படுகின்றன. ஆனால், ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டுபணிகள் மற்றும் தொலைத்தொடர்பு பணிக்காக குழிகள் தோண்டப்படும்போது, முன்அனுமதி பெறுவதில்லை.ஏதாவது அசம்பாவிதம் விபத்து மற்றும் உயிர்பலி ஏற்படுவதை தடுக்க, உரிய அனுமதி பெற வேண்டும். அப்போது, அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படும். அனுமதியின்றி பணிகள் மேற்கொள்ளப்பட்டால், பணியாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X