பொது செய்தி

தமிழ்நாடு

அடிப்படை கணினி அறிவு போதும்!

Added : பிப் 15, 2020
Advertisement

திருப்பூர்:''தொழில்முனைவோர், பொருட்களை ஆன்லைனில் சந்தைப்படுத்த கற்றுக்கொள்ளவேண்டும்'' என, கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.டிஜிட்டல் வர்த்தகம் குறித்த கருத்தரங்கம், திருப்பூரில் உள்ள தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டு மையத்தில் நேற்று நடந்தது. திறன் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் துவக்கிவைத்தார்.பயிற்சியாளர் மகாதேவன் பேசியதாவது:பொருட்களை சந்தைப்படுத்துவதில் கடந்த காலங்களில் பின்பற்றப்பட்டுவந்த நடைமுறைகள் தற்போது பலனளிக்காது. பொருட்களை எளிதாக சந்தைப்படுத்துவதற்கு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் கைகொடுக்கின்றன. எனவே, தொழில்முனைவோர், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து நன்கு அறிந்து, அவற்றை பயன்படுத்த வேண்டும்.பொருட்களை சந்தைப்படுத்த சமூக வலைதளங்கள் கைகொடுக்கின்றன. வர்த்தகத்துக்காக தொழில்முனைவோர் பிரத்யேக இணையதளங்களை உருவாக்கலாம். அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு இருந்தாலே போதும், அனைவரும் மிக எளிதாக ஆன்லைன் வர்த்தக தளங்களை இயக்கமுடியும்.எந்த பொருட்களை உற்பத்தி செய்கிறோம்; நுகர்வோர் யார் என்பதைப்பொருத்து, அதற்கேற்ப, வர்த்தக இணையதளங்களை வடிவமைக்கவேண்டும். நிறுவன விவரம், தரம், தயாரிப்பு பொருள் சார்ந்த விவரங்களை சுருக்கமாகவும், வெளிப்படை தன்மையுடன் குறிப்பிட வேண்டும்.நேரடி வர்த்தகத்தில், ஒரு பொருள், அடுத்தடுத்த நிலையில் உள்ள வர்த்தகர்களை கடந்து, நுகர்வாரை சென்றடைகிறது. ஆன்-லைன் வர்த்தகத்தில், உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோருக்கு நேரடியாக பொருள் சென்றடைகிறது. இதனால், நுகர்வோருக்கு குறைந்த விலைக்கு பொருள் கிடைக்கும். உற்பத்தியாளர்களும் கூடுதல் பயன்பெறமுடியும்.ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொருட்களை ஆன்லைனில் வாங்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, தொழில்முனைவோர், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பொருட்களை ஆன்லைனில் சந்தைப்படுத்த பழகிக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X