அடாவடி வசூல்

Added : பிப் 15, 2020
Advertisement

தென்னம்பாளையம் சந்தை வளாகத்தில், பொருள் வாங்கி வரும் நுகர்வோரிடமும், வாகனங்களை நிறுத்தி, அடாவடியாக சுங்கம் வசூலிக்கின்றனர். ஊழியர்கள் மரியாதை குறைவாகவும் மிரட்டல் விடும் வகையிலும் நடந்து கொள்கின்றனர்.- ராமமூர்த்தி, போயம்பாளையம்.பள்ளி அருகே குப்பை தொட்டிதிருப்பூர், கே.வி.ஆர். நகர், கதிரவன் பள்ளி அருகே அடுத்தடுத்து இரு குப்பை தொட்டிகள் உள்ளன. அதில் இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறது. கழிவு நீரும் வழிந்து மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.- ராமசாமி, கே.டி.சி., ரோடு.ஆக்கிரமிப்பு கடைகள்காங்கயம் ரோடு, நாச்சிபாளையம் பகுதியில், ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாயிலில் ரோட்டில் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். விபத்து அபாயம் உள்ளது.- ராமுகபிஷ், நாச்சிபாளையம்.பி.என்., ரோடு நெசவாளர் காலனியிருந்து எஸ்.வி.,காலனி செல்லும் திருமலை நகர் ரோடு 40 அடி அகலம் உள்ளது. இரு புறமும் கடைகள் வைத்து ஆக்கிரமித்துள்ளனர். வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது.- எஸ்.சந்திரசேகரன், எஸ்.வி., காலனி.குடிநீர் சப்ளை மோசம்தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சி, கொடுவாய், மதர்சிங் நகர் பகுதியில் குடிநீர் முறையாக வழங்குவதில்லை. ஐந்து நாளுக்கு ஒருமுறை வந்த குடிநீர் தற்போது 15 நாட்களுக்கு மேல் சப்ளையாகிறது.- ஏ. குமார், கொடுவாய்.குழி மூடாமல் அவதிதிருப்பூர், கொங்கு மெயின் ரோடு, தனலட்சுமி தியேட்டர் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க தோண்டிய குழிகள் முறையாக மூடப்படவில்லை. வாகனங்கள் கடந்த செல்ல சிரமமாக உள்ளது.- சி.பழனிசாமி, முருகசாமி லே -அவுட்.தெரு விளக்கு எரியவில்லை1. காங்கயம் ரோடு, காங்கேயன் நகர் 2 வது வீதியில் உள்ள சில தெரு விளக்குகள் முறையாகவும், சில விளக்குகள் முற்றிலும் கடந்த 3 மாதமாக எரியாமல் உள்ளது. இரவு நேரம் நடமாடவே அச்சமாக உள்ளது.- முத்துசாமி, காங்கயேன் நகர்.2. திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பிராசஸ் சர்வர் வீதியில் உள்ள மூன்று தெரு விளக்குகளும் கடந்த ஒரு மாதமாக எரியாமல் இருள் சூழ்ந்து உள்ளது.- பி.எஸ். ராமச்சந்திரன், பிராசஸ் சர்வர் வீதி.குழாய் உடைந்து குடிநீர் வீண்கல்லாங்காடு நால் ரோடு முதல் வீரபாண்டி செல்லும் வழியில், பல இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் ரோட்டில் வீணாகிறது. மேலும், ரோடும் சேதமாகிறது.- மாரியப்பன், கல்லாங்காடு.பூங்கா பராமரிக்க வேண்டும்பி.என்., ரோடு, சாந்தி தியேட்டர் பகுதியில் உள்ள குமரன் பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. அதை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும்.- விமலா, நெசவாளர் காலனி.என்.எச்., ரோடு மோசம்காரணம்பேட்டை நால் ரோடு பகுதியில் வாகனங்கள் திரும்பும் இடங்களில் என்.எச். ரோடு குண்டும் குழியுமாக, விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது.- ஆர்.சின்னசாமி, காரணம்பேட்டை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X