சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொட்டித்தள்ளிய தேனீக்கள் ஷெரீப் காலனியில் பரபரப்பு

Added : பிப் 15, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூரில் தேனீக்கள் கொட்டியதில், பலரும் அவதிப்பட்டு, அங்குமிங்கும் ஓடி தப்பித்தனர்.திருப்பூர் ெஷரீப் காலனியில் சில மரங்களில் தேன் கூடுகள் உள்ளன. தனியார் பள்ளி அருகே, வேப்பமரத்தில் தேன் கூடு இருப்பதை, வடமாநிலத்தவர் ஒருவர் பார்த்துள்ளார். தேன் சுவைக்கும் ஆர்வத்தில், நேற்று காலை, 11:30 மணியளவில், மரத்தில் ஏறியுள்ளார்; கூட்டில் கை வைத்து, தேன் எடுக்க முயன்றுள்ளார்.
தேனீக்கள், ரீங்காரமிட்டபடி, ஆயிரக்கணக்கில் படையெடுத்துவந்து, அவரை தாக்கின. மரத்திலிருந்து கீழே இறங்கியவர், சட்டையால் முகத்தை மூடியபடி, ரோட்டில் ஓடினார். இருப்பினும், தேனீக்கள் அவரை தாக்கியபடி, துரத்திக்கொண்டே சென்றன.தொடர்ந்து, அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளையும் தேனீக்கள் கூட்டம் கூட்டமாக பறந்துசென்று தாக்குதல் நடத்தின. ஹெல்மெட் அணிந்து வந்தோர், பைக்கில் தைரியமாக அவ்வழியை கடந்து சென்றனர். ஹெல்மெட் அணியாதோர், தேனீக்களுக்கு பயத்து, வாகனத்தை திருப்பிக்கொண்டு வந்தவழியே திரும்பி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X