பொது செய்தி

தமிழ்நாடு

என்.எஸ்.எஸ்., மாணவர் துாய்மை பணி விழிப்புணர்வு

Added : பிப் 15, 2020
Advertisement
  என்.எஸ்.எஸ்., மாணவர் துாய்மை பணி விழிப்புணர்வு

திருப்பூர்:மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தை கல்லுாரி மாணவர்கள் மூலம் மக்களிடையே கொண்டு சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளில் சிறப்பாக செயலாற்றும் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்களை கொண்டு, தொடர்ந்து, ஐந்து நாட்கள், மக்கள் அதிகமான நடமாடும் பொது இடங்களில் முகாம் நடத்த வேண்டும் என்பது நோக்கம். இதன்கீழ், தமிழகத்தில், சென்னை பல்கலை என்.எஸ்.எஸ்., திருவொற்றியூர் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லுாரி ஆகிய மூன்று கல்லுாரிகள் தேர்வாகியுள்ளன.மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நாட்டு நலப்பணித்திட்ட சென்னை மண்டலம் இக்கல்லுாரிகளை தேர்வு செய்து அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், சிக்கண்ணா கல்லுாரி என்.என்.எஸ்., அலகு 2 மாணவர்கள், ராயபுரம் ராஜவிநாயகர் மற்றும் அலகுமலை அழகாபுரி அம்மன் கோவில்களில் தொடர் துாய்மை பணியை துவங்கியுள்ளனர்.இதனை, எம்.எல்.ஏ., குணசேகரன், கல்லுாரி முதல்வர் தீபா ஆகியோர் துவக்கி வைத்தனர். பிப்., 17 வரை கோவில்களை சுத்தம் செய்வது சுவர்களுக்கு வண்ணம் தீட்டுவது உள்ளிட்ட பணிகளில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஈடுபடுகின்றனர். அதன்பின், ரயில்வே ஸ்டேஷன், அரசு மருத்துவமனை, அரசு பள்ளி ஆகிய இடங்களில் துாய்மைப்பணி மேற்கொள்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X