பொது செய்தி

தமிழ்நாடு

'அதிக உரத்தால் மண் வளம் பாதிப்பு': கல்லூரி கருத்தரங்கில் கவலை

Added : பிப் 15, 2020
Advertisement

அவிநாசி;அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், சூழலியல் மன்ற துவக்க விழா, நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் விஜயலட்சுமி, தலைமை வகித்தார். மன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரசன்னகுமார் வரவேற்றார்.கோவை, இயற்கை அறிவியல் நிறுவன இயக்குனர் சீனிவாசன் பங்கேற்று, சூழலியல் மன்றத்தை துவக்கி வைத்து பேசியதாவது:இயற்கையை பாதுகாப்பதன் மூலம் மட்டுமே, மனிதகுலம் பாதுகாப்பாக வாழ முடியும். ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை நட வேண்டும். அளவுக்கதிகமான உர பயன்பாடால் மண் வளம் பாதிக்கப்பட்டிருக்கிறது. விவ சாய நிலங்களில் மேல்மண் பாதுகாக்கப்பட வேண்டும்.பாலிதீன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இயற்கை இடர்பாடு வரும்போது, பொதுமக்களுக்கு உதவ வேண் டும். ஒழுக்கம் நிறைந்தவர்களாக வாழ வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.அதன்பின், கல்லுாரி வளாகத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியை, சூழலியல் மன்ற தலைவர் டாக்டர் பாலமுருகன் ஒருங்கிணைத்திருந்தார். மன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஷகிலாபானு நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X