தினமும் வெவ்வேறு பஸ் தொழிலாளர்கள் குழப்பம்| Dinamalar

தினமும் வெவ்வேறு பஸ் தொழிலாளர்கள் குழப்பம்

Added : பிப் 15, 2020
Share
பல்லடம்:ஒரே வழித்தடத்தில், வெவ்வேறு பஸ்கள் இயக்கப்படுவதால், பயணிகள் குழம்பி தவிக்கின்றனர்.திருப்பூரிலிருந்து, நொச்சிபாளையம், அல்லாளபுரம், உகாயனுார் வழியாக, பொங்கலுாருக்கு, அரசு பஸ் எண்: 28, இயக்கப்படுகிறது. வழக்கமாக இயங்கி வந்த, 28ம் எண் பஸ்சுக்கு பதில், கடந்த சில மாதங்களாக மாற்று பஸ்கள் இயக்கப்படுகின்றன. அவ்வாறு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணங்களில் வரும் பஸ்களால், வாகன

பல்லடம்:ஒரே வழித்தடத்தில், வெவ்வேறு பஸ்கள் இயக்கப்படுவதால், பயணிகள் குழம்பி தவிக்கின்றனர்.திருப்பூரிலிருந்து, நொச்சிபாளையம், அல்லாளபுரம், உகாயனுார் வழியாக, பொங்கலுாருக்கு, அரசு பஸ் எண்: 28, இயக்கப்படுகிறது. வழக்கமாக இயங்கி வந்த, 28ம் எண் பஸ்சுக்கு பதில், கடந்த சில மாதங்களாக மாற்று பஸ்கள் இயக்கப்படுகின்றன. அவ்வாறு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணங்களில் வரும் பஸ்களால், வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர்.அப்பகுதியினர் கூறியதாவது:திருப்பூர் - பொங்கலுார் வரை, ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன. தினமும், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ மாணவியர் என, ஏராளமானோர் திருப்பூர் சென்று வருகின்றனர். வழக்கமாக வந்து கொண்டிருந்த, 28ம் எண் பஸ், சில மாதங்களாக வருவதில்லை.இதனால், குழப்பம் ஏற்படுகிறது. எனவே, வழக்கமாக இயங்கி வந்த, 28ம் எண் பஸ்சையே மீண்டும் இயக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X