பொது செய்தி

தமிழ்நாடு

நடமாடும் 'ஏ.டி.எம்.,' ஆக 'போஸ்ட்மேன்': வங்கி கணக்கு பணத்தையும் எடுக்கலாம்

Added : பிப் 15, 2020
Advertisement
 நடமாடும் 'ஏ.டி.எம்.,' ஆக 'போஸ்ட்மேன்': வங்கி கணக்கு பணத்தையும் எடுக்கலாம்

திருப்பூர்:தபால்துறையின் ஒரு அங்கமாக, 'இந்திய போஸ்டல் பேமண்ட் பேங்க்' எனும் தபால் வங்கியை, மத்திய அரசு கடந்தாண்டு துவக்கியது. நாடுமுழுவதும், 650 தலைமை தபால் அலுவலகம் மற்றும், 3 ஆயிரத்து, 250 தபால் அலுவலகங்களில், கிளைகள் உண்டு. தபால் பட்டுவாடா செய்யும் போஸ்ட்மேன்களே, பேமண்ட் வங்கி சேவையை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக கொண்டு சேர்த்து வந்தனர்.
தற்போது, 'ஆதார் எனேபில்டு பேமண்ட் சிஸ்டம்' (ஏ.இ.பி.எஸ்.,) எனும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை, போஸ்ட்மேன் மூலம் வீட்டு வாசலுக்கு கொண்டு சேர்க்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. கடந்த செப்., 2019ல் அறிமுகமான இத்திட்டம் தற்போது திருப்பூர் மாவட்டத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.வங்கி அக்கவுண்ட்டில் இருந்து அவசரமாக பணம் எடுக்க வேண்டும்; வங்கி ஏ.டி.எம்., சென்டருக்கு நீண்ட துாரம் செல்ல வேண்டும் போன்ற சூழலில், ஏரியா போஸ்ட்மேனை அழைத்தால் போதும். சில நிமிடங்களில் வீட்டுவாசலில் நிற்பார். வங்கி கணக்கில் இணைக்கப்பட்ட ஆதார் எண்ணை சொல்லி, கைரேகையை பதிவு செய்தால் போதும். தேவையான பணத்தை ரொக்கமாக உங்கள் கணக்கில் இருந்து எடுத்து கொடுத்து விடுவார். ஏ.டி.எம்., கார்டு தேவையில்லை.திருப்பூர் தபால் வங்கி வர்த்தக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஏ.டி.எம்., கார்டு தொலைந்து விட்டது. கணக்கில் இருந்து அவசரம் பணம் எடுக்க வேண்டும். வங்கி பல மைல் தொலைவில் உள்ளது. வருத்தப்பட வேண்டாம்; போஸ்ட்மேன் வீடு தேடி ரொக்க பணத்தை தர ரெடியாக உள்ளார்.
காலை, 10:00 முதல், மாலை, 4:00 மணி வரை எந்த நேரத்திலும் அழைக்கலாம். எந்த தனியார் வங்கியில் இருந்தும் பணம் எடுக்கலாம்.சமீபத்தில், வங்கி வேலைநிறுத்தத்தின் போது, இவ்வசதியை அதிகமானோர் பயன்படுத்தினர். பிற வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்கும்போது பிடிக்கப்படும் கமிஷன் தொகையும் இல்லை என்பது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பிளஸ். வங்கி கணக்குகளில் ஆதார் எண் இணைத்தால் போதும். உங்கள் ஊர் மற்றும் அருகில் உள்ள போஸ்ட்மேனின் மொபைல் எண்ணை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X