ரத்த வங்கி இல்லை நோயாளிகள் கவலை

Added : பிப் 15, 2020
Advertisement

பல்லடம்:பல்லடம் அரசு மருத்துவமனைக்கு, தினசரி, 600க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். விபத்து உள்ளிட்ட அவசர காலங்களில், ரத்தம் தேவைப்படும் நோயாளிகள், கடும் அவதிக்குள்ளாகின்றனர்.இது குறித்து, நோயாளிகள் கூறியதாவது:பல்லடம் அரசு மருத்துவமனையில், ரத்த வங்கி கிடையாது. ரத்தம் தேவைப்படும் நோயாளிகள், திருப்பூர் அல்லது கோவை மருத்துவ மனைக்கு அனுப்பப்படுகின்றனர். உயிரை காக்கப் போராடும் நேரத்தில், கடும் வாகன போக்குவரத்து நெரிசலுக்கு இடையே, திருப்பூர், கோவை செல்வது எளிதான காரியமல்ல. அதனால், அவசர காலங்களில் ரத்தம் பெறமுடியாமல், உயிரிழப்பு ஏற்படும் அவல நிலை உண் டாகிறது.நுாற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் அரசு மருத்துவமனையில், ரத்த வங்கி இல்லை என்பது கவலைக்குரியதாக உள்ளது. ரத்த வங்கி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X