பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக பட்ஜெட்: பின்னலாடை துறையினர் வரவேற்பு

Added : பிப் 15, 2020
Advertisement

திருப்பூர்:2020 --- 21ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் அறிவிப்புக்கு, திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்பு அளித்துள்ளனர்.ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல்:நடப்பு நிதியாண்டில் பொருளா தார வளர்ச்சி, 7.27 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைத்தறி, ஜவுளி துறைக்கு, ஆயிரத்து 224 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.சேலத்தில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டம்; சிறு, குறு தொழில்களுக்கு வட்டி மானியம் மூன்றில் இருந்து ஐந்து சதவீதமாக உயர்த்தப்படுவது; திறன் மிகு நகரங்கள் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நாகை, ஆற்காட்டுத்துறை, துாத்துக்குடி ஆகிய இடங்களில், புதிய துறைமுகங்கள்; முத்திரைத் தாளுக்கான வரி, 0.25 சதவீதமாக குறைப்பு; கல்விக்கு அதிக ஒதுக்கீடு, உணவு மானியத்துக்கு 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என, தமிழக பட்ஜெட் வரவேற்கத்தக்க வகையில் உள்ளது.ஏற்றுமதியாளர் சங்க தலைவர்ராஜா சண்முகம்:வட்டி மானியம் ஐந்து சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பது, சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும். முத்திரை தாளுக்கான வரி குறைக்கப்பட்டிருப்பது அனைத்துதரப்பினருக்கும் பயன்தரும். திறன் மேம்பாட்டு திட்டத்துக்காக, 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திறன் மிக்க தொழிலாளர்களை உருவாக்குவதன்மூலம், தொழில் மேலும் வளர்ச்சி பெறும். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை, நிதியாண்டுக்குள் முழுமையாக பயன்படுத்தி, திட்டங்களை துரிதமாக செயல்படுத்தவேண்டும்; அப்போதுதான், பட்ஜெட்டின் உண்மையான பயனை பெறமுடியும்.'சைமா' சங்க தலைவர் ஈஸ்வரன்:சிறு, குறு தொழிலுக்காக, ரூ.130 கோடிக்கும் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; வட்டி மானியம் ஐந்து சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டுக்காக 200 கோடி; தொழில்நுட்ப இடைவெளியே குறைக்க 50 கோடி ஒதுக்கியிருப்பது, தொழில் வளர்ச்சிக்கு கைகொடுக்கும். பிரதமரின் வீட்டு வசதி திட்டம், தமிழக முதல்வரின் பசுமை வீடு கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு, திருப்பூர் போன்ற தொழிலாளர் அதிகமுள்ள நகரங்களில் வீடு கட்டுவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும். அவிநாசி - அத்திக்கடவு திட்ட செயல்பாட்டுக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.'டீமா' சங்க தலைவர் முத்துரத்தினம்:ஆடை உற்பத்தி துறை, தற்போது நெருக் கடியான சூழலில் உள்ளது. இந்நிலையில், ஒட்டுமொத்த ஜவுளித்துறைக்கும் சேர்த்து பட்ஜெட்டில் ஆயிரத்து 224 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பது போதுமானதாக இல்லை விவசாய மண்டலம் போன்று, திருப்பூர் மாவட்டத்தை பின்னலாடை துறை மண்டலமாக அறிவிக்க வேண்டும்; பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கான பிரத்யேகமான திட்டங்களை அறிவிக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X