அடிப்படை வசதியின்றி அல்லல் தவிப்பில் கருப்பசாமி கோயில் தெரு மக்கள்

Added : பிப் 15, 2020
Advertisement

சாத்துார்:சாத்துார் அமீர்பாளையம் கருப்பசாமி கோயில் தெருவில் ரோடு, வாறுகால்
வசதியின்றி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.இப்பகுதியில் அரிசி ஆலை, தீப்பெட்டி
தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன.

மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் இத்தெருவில் ரோடு போட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாவதால்குண்டும் குழியுமாக காணப்படுகிறது. வாறுகால்கள் தூர்ந்து போன நிலையில் கழிவுநீர் செல்ல வழியின்றி ரோட்டில் தேங்கி நிற்கிறது. பொது கழிப்பறை வசதி இன்றி காலி இடங்களையும் ஆற்றுப் பகுதி யையும் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

தெருவிளக்குகள் அடிக்கடி எரியாததால் இரவு நேரத்தில் கையில் விளக்குடன் நடமாடும் நிலை உள்ளது. ரோடு, வாறுகால், மற்றும் பொது கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
குடிநீர் பற்றாக்குறை

ஒருநாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வருகிறது. அதுவும் குறைந்த நேரம்தான் வினியோகம் செய்யப்படுகிறது. வீட்டிற்கு 4 குடம் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. பலர் மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுப்பதால் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. வண்டியில் விற்கப்படும் தண்ணீரை விலைக்கு வாங்கி குடிநீராக பயன்படுத்துகிறோம். தட்டுப்பாடுயின்றி குடிநீர் வழங்க வேண்டும்.

-- வீரலட்சுமி, குடும்பத்தலைவி.

கொசுக்கடியால் அவதி

குப்பைத்தொட்டி உள்ளபோதும் குப்பையை தெருவில் வீசி செல்வதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மாதம் ஒருமுறை மட்டுமே குப்பையை அகற்ற துப்புரவு பணியாளர்கள் வருகின்றனர். வாறுகால் தள்ள ஆட்கள் வருவதில்லை.பன்றிகள் அதிக அளவில் உலா வருகின்றன.ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது.குழந்தைகள் முதியவர்கள் கொசுக்கடியால் அவதிக்குள்ளாகின்றனர்.

-ராஜேஸ்வரி குடும்பத்தலைவி.

வாறுகால் தேவை
கருப்பசாமி கோயில் தெருவில் வாறுகாலை பாதி கட்டிவிட்டு மீதியை கட்டாமல் விட்டுவிட்டனர் இதனால் சாக்கடை செல்லாமல் ரோட்டில் தேங்கி நிற்கிறது. சாக்கடையில் கால்வைத்து நடந்து செல்கிறோம். சாக்கடை தேங்கி நிற்பதால் குழந்தைகளை வெளியில் விளையாட கூட விட முடியவில்லை. மக்கள் சுகாதாரமாக வாழ நடவடிக்கை தேவை.

-கருப்பாயம்மாள், குடும்பத்தலைவி.

நடவடிக்கை எடுக்கப்படும்

அமீர் பாளையம் கருப்பசாமி கோயில் தெருவினை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

- சத்தியாவதி, பி.டி.ஓ. ,சாத்துார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X