பொது செய்தி

தமிழ்நாடு

உற்பத்தி செலவு தொடர்ந்து அதிகரிப்பு: களைக்கொல்லியை நாடும் விவசாயிகள்

Added : பிப் 15, 2020
Share
Advertisement

பொங்கலுார்:உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால், விவசாயிகள் களைக்கொல்லியை நாடுகின்றனர்.விவசாயம் செய்வதற்கு சீரான தண்ணீர் வசதி கிடைப்பதில்லை. பருவமழை மற்றும் அதனால் கிடைக்கும் நிலத்தடி நீர் ஆகியவை ஆண்டின் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைப்பதால் பல விவசாயிகள் ஒரே சீசனில் பயிர் சாகுபடியை துவக்குகின்றனர். இதனால் உற்பத்தி அதிகரித்து அடிக்கடி விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. விவசாயிகளுக்கு வருமானம் குறைகிறது.தற்போது கிராமப்புறங்களில் தொழிலாளர்களுக்கான கூலி அதிகரித்துள்ளது. டிராக்டர் களுக்கான டீசல் செலவு, வாடகை மற்றும் இடு பொருட்கள் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.இதனால், சாகுபடி, களையெடுப்பு, அறுவடை என பல்வேறு கட்டங்களில் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. விவசாயிகள் உற்பத்திச் செலவை குறைப்பதற்காக களைக்கொல்லி பயன்படுத்துவதை அதிகரிக்க துவங்கியுள்ளனர். களைக்கொல்லி பயன்படுத்துவதால் நிலத்தில் முளைக்கும் களைச்செடிகள் கருகி விடுகின்றன.விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவு குறைந்த போதிலும் அது வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பல வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட களைக்கொல்லி கள் கூட இங்கு சர்வ சாதாரணமாக விற்பனை யாகின்றன.நிலத்தில் தெளிக்கப்படும் களைக்கொல்லிகள் மண்ணை மலடாக்குகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அதிகமாக பயன்படுத்தினால் மண்ணில் பயிர்கள் வளர்வது பாதிக்கப்படும். மேலும், அது நிலத்தில் ஊடுருவி குடிநீரில் கலந்துவிடும். இதை அருந்தும் விலங்குகள், பறவைகள், மனிதர்கள் என அனைத்து உயிரினங்களுக்கும் நோய்களை உருவாக்கும்.களைக்கொல்லி பயன்பாட்டை ஊக்குவிப்பதை அரசு தவிர்க்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X