சம்பவம் செய்தி

தமிழ்நாடு

52 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்

Added : பிப் 15, 2020
Advertisement

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே சிதம்பராபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக அருப்புக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு தகவல் வந்தது.

இதையடுத்து நேற்று அதிகாலையில் வட்ட வழங்கல் அலுவலர் ரமணன், ஆர்.ஐ.,
துரைமுருகன் மற்றும் அலுவலர்கள் சிதம்பராபுரம் சென்று கண்காணிப்பு பணியில்
ஈடுபட்டனர். மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டு லாரியை மடக்கி பிடித்தனர்.

லாரியில் வந்த இருவரை விசாரித்த போது கடலாடி அவத்தான்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் தர்மராஜ் 29,உடன் வந்தவர் லாரி உரிமையாளர் எருமைகுளத்தை சேர்ந்த முனியசாமி 42,
என்பதும், இருவரும் வீடு வீடாக சென்று ரேஷன் அரிசியை கிலோ 10 ரூபாய்க்கு வாங்கி கடத்தி செல்வது தெரிந்தது. 52 மூடை ரேஷன் அரிசி, லாரியுடன் இருவரையும் விருதுநகர் உணவு கடத்தில் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X