சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை திருடிய ஆசாமி கைது: 70 சவரன் நகை பறிமுதல்

Added : பிப் 15, 2020
Advertisement
 நகை திருடிய ஆசாமி கைது: 70 சவரன் நகை பறிமுதல்

திருப்பூர்:பூட்டிய வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவரை, தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.திருப்பூர் வடக்கு மற்றும் அனுப்பர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில், பூட்டிய வீடுகளில் புகுந்து, நகை திருடிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
இதற்காக, துணை கமிஷனர் பத்ரி நாராயணன், வடக்கு உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரித்து வந்தனர்.இச்சூழலில், நேற்று மதியம், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு பஸ் ஸ்டாப் அருகில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர் தேனி மாவட்டம், கடமலைக்குன்று பகுதியை சேர்ந்தவர் பாலாஜி, 33. என்பதும், திருப்பூர், பூலுவபட்டி, அம்மன் நகரில் தங்கியிருப்பதும் தெரிந்தது. இவர், திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, திருநீலகண்டபுரம், காட்டன்மில் ரோடு, ராஜாஜி நகர் பகுதிகளில், ஆளில்லாமல் பூட்டியிருந்த வீடுகளில் புகுந்து, 80 சவரன் நகையை, மர்ம நபர்கள், நகையை திருடியது தெரிந்தது.அவரை கைது செய்த போலீசார், 70 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X