பொது செய்தி

தமிழ்நாடு

பயங்கொள்ளலாகாது! மாணவருக்கு உளவியல் 'அட்வைஸ்'

Added : பிப் 15, 2020
Advertisement

திருப்பூர்:பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவர்களின் பயத்தை போக்கும் வகையில் உளவியல் ரீதியான ஆலோசனைகள் மனநல மருத்துவர்கள் மூலம் பள்ளிகள்தோறும் வழங்கப்பட்டு வருகின்றன
.திருப்பூரில் மாவட்ட மனநலத்திட்டம் சார்பில் பள்ளிகள், கல்லுாரிகளில் மாணவர்களுக்கு மாதந்தோறும் மனநல ஆலோசனை வழங்கப்படுகின்றன. இதன்மூலம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிப்பது, நேர மேலாண்மை, தேர்வு பதட்டம், மன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிமுறைகளை ஆசிரியர்கள் கற்று வருகின்றனர். தற்போது தேர்வு நேரம் நெருங்கியுள்ளதால், பொதுத்தேர்வு வகுப்புகளுக்கு மனநல ஆலோசனைகள் பல்வேறு பள்ளிகளில் வழங்கப்படுகின்றன.ஆரோக்கியத்தில் அக்கறைமாவட்ட மனநல மருத்துவர் சுகன்யா தேவி கூறியதாவது:குழந்தைகளின் கவனம் முழுவதும் புத்தகத்திலே மூழ்கி கிடக்கும் இந்த சமயத்தில் பெற்றோர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டியது அவசியம். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட துவங்குங்கள். முன்னெச்சரிகையுடன் இருந்தால் கடைசி நேர உடல் உபாதைகளை தவிர்க்கலாம்.பல நேரங்களில் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்குவதே ஆசிரியர்கள்தான். நன்றாக படிக்கும் மாணவர்கள்மீதே கவனம் செலுத்துகின்றனர். சுமாராக படிக்கிறவர்களை அதிகம் கவனிப்பதில்லை. இதனால் பதற்றம் கொள்கிறார்கள்.ஆசிரியர் தன்னை பற்றி என்ன சொல்கிறார், தன் திறன்களைப்பற்றி என்ன நினைக்கிறார் என்பதை பொறுத்து மாணவனின் தன்னம்பிக்கை பாதிக்கப்படும். எனவே, நீங்கள் அவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.
தங்கள் எதிர்பார்ப்பை மாணவர்மீது திணிக்காமல், அதநேரம், அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் நடந்து கொள்ளலாம்.104 இலவச ஆலோசனைதுாக்கமின்மை, எரிச்சல், முன்கோபம், தலைவலி, உடல்வலி, அதிகம் பசியெடுத்தல், பசியின்மை என, தேர்வுக்கு முன்னால் ஏற்படக்கூடிய இதுபோன்ற அறிகுறிகள் இருப்பின் மாவட்ட மனநல ஆலோசனை மையத்தை அணுகலாம். அல்லது, 104 இலவச ஆலோசனை எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X