சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி பணியாளரை தாக்கியோர் மீது வழக்கு

Added : பிப் 15, 2020
Advertisement

திருப்பூர்:ஊராட்சி குடிநீர் ஆப்ரேட்டரை தாக்கிய நான்கு பேர் மீது, ஊதியூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.காங்கயம் ஒன்றியம், ஊதியூர் அருகே உள்ள, ஆரத்தொழுவை சேர்ந்தவர் கரிச்சிக்குமார், 40. ஆரத்தொழுவு ஊராட்சியில், தற்காலிக குடிநீர் ஆப்ரேட்டராக உள்ளார். நேற்று முன்தினம், குடிநீர் தொட்டிகளுக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றிவிட்டு திரும்பினார். அவரை, நான்கு பேர் வழிமறித்து, மோட்டார் அறை சாவியை கேட்டுள்ளனர்; சாவியை கொடுக்க மறுத்ததால், கடுமையாக தாக்கியுள்ளனர்.காயமடைந்த கரிச்சிக்குமார், அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெறுகிறார். ஊதியூர் போலீசார், என். பாலசுப்பிரமணி, ஏ.பாலசுப்பிரமணி, ராசு, கோவிந்தராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X