கூலித் தொழிலாளி மயங்கி விழுந்து சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூலித் தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

Added : பிப் 15, 2020
Share

விழுப்புரம்:கிளியனுார் அருகே விவசாய கூலித் தொழிலாளி, மயங்கி விழுந்து இறந்தார்.

திண்டிவனம் தாலுகா, மொளசூரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 45; விவசாய கூலித் தொழிலாளி. இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், நேற்று மொளசூர் அய்யனார் கோவில் அருகே மணிகண்டன் திடீரென மயங்கி விழுந்தார்.

அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மணிகண்டன் இறந்து விட்டதாக கூறினார்.இது குறித்த புகாரின்பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X