பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர் நலன் காக்க ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் பூஜை

Added : பிப் 15, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூர், வீரராகவப்பெருமாள் கோவிலில், பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு பூஜை, நாளை நடக்கிறது.திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவில் வளாகத்தில், ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவருக்கு தனி சன்னதி உள்ளது. திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர் நலனுக்காக, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருக்கு, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.வரும் பொதுத்தேர்வில் பங்கேற்கும் பிளஸ் 2. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஹயக்ரீவர் வழிபாடு கடந்த வாரம் துவங்கியது. இரண்டாம் கட்டமாக, நாளை நடக்கும் வழிபாட்டில், பொதுத்தேர்வு எழுதும், மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.காலை, 9:00 மணிக்கு, சிறப்பு யாக பூஜையும், 10:30 மணிக்கு, லட்சுமி ஹயக்கிரீவர் திருமஞ்சனமும், 11:00 மணிக்கு, நாம சங்கீர்த்தனமும், 11:30 மணிக்கு, சாத்துமறை மற்றும் மகா தீபாராதனையும் நடைபெறும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பங்கேற்க திருவடி திருத்தொண்டு அறக்கட்டளையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X