அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்வது மத்திய அரசின் கடமை'

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (12)
Advertisement
'மாநிலங்கள், இழப்பை # ,சரிசெய்,மத்திய அரசின் கடமை#

இந்த செய்தியை கேட்க

சென்னை : ''மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடுகளை செய்ய வேண்டும். மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டை, எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
பட்ஜெட் உரையில், அவர் கூறியதாவது:
மாநிலத்தின் பன்முகப் பொருளாதாரம், மாநில அரசின் நிலையானக் கொள்கை போன்றவை, 2018 - 19ம் ஆண்டில், தமிழகத்தின் வளர்ச்சி விகிதம், 8.17 சதவீதம் அடைவதை, உறுதி செய்துள்ளன. வரும் நிதியாண்டில், மேலும் வலுவான பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்.




தமிழகத்திற்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக, 4,025 கோடி ரூபாய் வழங்க, 15வது நிதிக் குழு பரிந்துரை செய்துள்ளது. மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தேவையான, அரசின் மக்கள் நலச் செலவினங்களை, இந்த அறிக்கை ஏற்றதையே, இது குறிக்கும்.
ஆனால், 74 ஆயிரத்து, 340 கோடி ரூபாயை, நிதிக் குழு பரிந்துரைத்த நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டில், மானியத்திற்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மானியத் தொகையை முழுமையாக பெறுவதை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடுகள் செய்ய, மாநில அரசு வலியுறுத்தும்.

ஜி.எஸ்.டி., வரி அமல்படுத்தியதில் இருந்து, ஐந்து ஆண்டுகளுக்கு, மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை வழங்குவதற்கான வருவாயை பெருக்க, உரிய வழிகளை கண்டறிவது, மத்திய அரசின் கடமையாகும்.

மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டினை, எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது. 2019 அக்டோபர் மாதம், பிரதமரை சந்தித்தபோது, முதல்வர், இதை எடுத்துரைத்தார். எனவே, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தில், இது குறித்து விவாதித்து, உரிய தீர்வை எட்ட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-பிப்-202017:59:26 IST Report Abuse
தமிழ்வேல் 2019 அக்டோபர் மாதமே கேட்கப்பட்டும் மத்திய அரசு தனது பட்ஜெட்டில் அதில் பாதிக்கும் குறைவாக (74 ஆயிரத்து, 340 கோடிக்கு பதில் 30 000 கோடி மட்டும்) ஒதுக்கி உள்ளது நமது துர் அதிர்ஷடம். அதுவும் தோழமைக்கு கட்சியின் ஆட்சியில்....
Rate this:
Share this comment
Cancel
MANITHAN -  ( Posted via: Dinamalar Android App )
15-பிப்-202013:26:35 IST Report Abuse
MANITHAN ஆமாம் மத்தியஅரசுக்கு அரசின் கடமை!
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
15-பிப்-202011:58:42 IST Report Abuse
karutthu ஆமாம் இந்த பட்ஜெட் பெட்டியை அம்மா சமாதியில் வைத்து வணங்கிவிட்டு தானே வந்தீர்கள் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X