பீமா கோரேகான் வழக்கு: மஹா., அரசு மீது சரத்பவார் அதிருப்தி

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (9)
Advertisement
SharadPawar, UddhavThackeray,BhimaKoregaon, NIA, உத்தவ்தாக்கரே,சரத்பவார், மஹாராஷ்டிரா, மகாராஷ்டிரா, பீமாகோரேகான், என்ஐஏ

இந்த செய்தியை கேட்க

கோல்ஹாப்பூர்: பீமா கோரேகான் கலவர வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு(என்.ஐ.ஏ.,) விசாரணைக்கு மாற்ற உத்தவ் தாக்கரே தலைமையிலான மஹாராஷ்டிரா அரசு ஒப்புக்கொண்டது தவறு என கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அதிருப்தி தெரிவித்துள்ளார்.


ஒப்புதல்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பீமா கோரேகான்வன்முறைக்கு காரணமாக கூறப்படும் எல்கர் பரிஷத் மாநாட்டில் பேச்சு தொடர்பான வழக்கை என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றப்பட்டது. இந்த கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ.,வுக்கு மாற்ற சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு, முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர், தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டு, என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றியதற்கு எந்த ஆட்சேபனை இல்லை என தெரிவித்தது. புனே செசன்ஸ் கோர்ட்டிலும் அறிக்கை அளித்தது.


குற்றச்சாட்டு

இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும் மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சருமான அனில் தேஷ்முக் கூறுகையில், இந்த விவகாரத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தன்னை மீறி செயல்பட்டார் என குற்றம்சாட்டினார். வழக்கை மாற்ற உள்துறை அமைச்சகத்திற்கு எந்த ஆட்சேபனை இல்லை என மாநில கூடுதல் தலைமை செயலாளரும் அறிக்கை அளித்தார்.





முடிவு தவறு


இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறுகையில், பீமா கோரேகான் கலவர வழக்கு விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீசாரின் நடவடிக்கைகள் ஆட்சேபனைக்கு உரியது. அவர்களின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்பது எனது எண்ணம். ஒரு நாள் காலை,அந்த போலீஸ் அதிகாரிகளை மஹாராஷ்டிரா அமைச்சர்கள் சந்திக்கின்றனர். அன்று மாலையே வழக்கு என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றப்படுகிறது. அரசியல்சாசனப்படி, இந்த நடவடிக்கை தவறானது. கிரிமினல் வழக்கு விசாரணை, மாநில அரசின் வரம்பில் வருகிறது. வழக்கு விசாரணையை மாநில அரசின் கையில் எடுத்த மத்திய அரசின் முடிவு தவறு. இதற்கு ஆதரவு தெரிவித்த மஹாராஷ்டிரா அரசின் முடிவும் தவறு. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
15-பிப்-202013:53:13 IST Report Abuse
தாண்டவக்கோன் இப்போ உண்மை வெளியே வரும் ன்னு பதறுறார்
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
15-பிப்-202012:15:21 IST Report Abuse
madhavan rajan மடியிலே கனம் இருந்தால்...... இவர்கள் கட்சி ஆட்களுக்கு கலவரத்தில் தொடர்பு இருக்கிறது என்பதை சூசகமாக தெரிவிக்கிறார் போலும்.
Rate this:
Share this comment
Cancel
CSCSCS - CHENNAI,இந்தியா
15-பிப்-202011:50:44 IST Report Abuse
CSCSCS தீவிரமான ஆபத்தான விஷயங்களில் கூட அரசியல் செய்யநினைக்கும் (பழைய இந்திரா காங்கிரெஸ் கார) அரசியல் வியாதியிடமிருந்து வேறு என்ன எதிர் பார்க்க முடியும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X