பொது செய்தி

தமிழ்நாடு

விடைத்தாளில் கைரேகை பதிவு: டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் சீர்திருத்தம்

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
tnpsc, exam, group2, group4, டிஎன்பிஎஸ்சி, தேர்வு, சீர்திருத்தம்

இந்த செய்தியை கேட்க

சென்னை: தேர்வு முறைகேடு புகார்களை தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. விடைத்தாளில், கையெழுத்து பெறுவதற்கு பதில், கைரேகை பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., நடத்திய ' குரூப் - 4, குரூப்-2, குரூப் -2ஏ' உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் முறைகேடு புகார்கள் எழுந்தது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிர்வாக ரீதியாக சில மாற்றங்களை டி.என்.பி.எஸ்.சி., ஏற்படுத்தியது.

இந்நிலையில், தேர்வில் மேலும் சீர்திருத்தங்கள் செய்யப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.


latest tamil newsஇது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தேர்வு காலை 10 மணிக்கு துவங்கினாலும், தேர்வர்கள் காலை 9 மணிக்கே தேர்வு மையங்களுக்கு வர வேண்டும். தேர்வர்களின் மெய்த்தன்மையை உறுதி செய்யவும், விதிகளை விளக்கவும் காலை 9 மணிக்கே வர வேண்டும். காலை மாலை என இரு தேர்வு நடந்தால், மாலை தேர்வு பிற்பகல் 3 மணிக்கு துவங்கும்.

கொள்குறிவகை தேர்வுகளில் அனைத்து கேள்விகளுக்கும் கட்டாயம் விடையளிக்க வேண்டும். விடை தெரியாத பட்சத்தில், கூடுதலாக கொடுக்கப்படும் 'E' என்ற வட்டத்தை கருமையாக்க வேண்டும். எத்தனை கேள்விகளுக்கு விடைகளை நிரப்பியுள்ளனர் என்ற விவரங்களை தனியே பதிவு செய்ய வேண்டும். விடைகளை நிரப்பிய விவரத்தை பதிவு செய்ய கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்.கேள்விகளுக்கு 'A,B,C,D,E' ஆகிய ஏதேனும் ஒன்றை குறிக்கத் தவறினால் விடைத்தாள் செல்லாது.

குரூப் 4, குரூப் 2-ஏ தேர்வுகளில் பொது அறிவுத்தாள் இரண்டாக பிரிக்கப்படும். மேலும், இந்த தேர்வுகள் முதல்நிலை மற்றும் முதன்மை நிலை என இரு தேர்வுகளாக நடத்தப்படும். தேர்வர்களின் விடைத்தாளை அடையாளம் காண இயலாத வகையில் கையெழுத்திற்கு பதில் கைரேகை பதிவு செய்யப்படும்.

தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்களை பாதுகாப்பான முறையில் தேர்வாணைய அலுவலகத்திற்கு கொண்டு வர தற்போதுள்ள முறை முற்றிலும் மாற்றப்பட்டு அதிநவீன தொழில்நுட்ப ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி வசதியுடன் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. விடைத்தாளை கொண்டு வரும் நடவடிக்கைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
16-பிப்-202004:05:27 IST Report Abuse
Ray கேள்விகளுக்கு 'A,B,C,D,E' ஆகிய ஏதேனும் ஒன்றை குறிக்கத் தவறினால் விடைத்தாள் செல்லாது. VERY ATROCIOUS IF ANYBODY MISS ANYONE OF THE QUESTION EVEN BY OVER SIGHT HIS PAPER GETS SUMMARILY REJECTED PEOPLE WILL HAVE TO SPEND MORE TIME TO VERIFY THIS ASPECT. .
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
15-பிப்-202022:26:00 IST Report Abuse
Tamilan இவ்வளவு அபரிமிதமான விஞ்சான வளர்ச்சியடைந்த இந்த நூற்றாண்டிலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த கை நாட்டை விடமுடியவில்லை
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
15-பிப்-202020:52:13 IST Report Abuse
தமிழ்வேள் முதலில் இந்த இடஒதுக்கீட்டை ஒழியுங்கள் ..குறிப்பாக பிசி எம்பிசி இந்த ஒதுக்கீட்டில் வருபவர்களே பெரும்பாலும் ஊழல் மற்றும் முறைகேட்டில் அதிகம் ஈடுபடுகிறார்கள் அரசியல் வாதி சாதி சங்க ஆட்களோடு ஈடுபாடு கொண்டு அனைத்து விதமான சட்டவிரோத சமூகவிரோத செயல்களிலும் ஈடுபடுகிறார்கள் ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X