முதல் ஆளாக நானே சிறைக்கு செல்வேன் : அசோக் கெலட்

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (64)
Share
Advertisement
ஜெய்பூர் : என் பெற்றோரின் பிறப்பிடம் பற்றி எனக்கு தெரியாது. அதனால் முதல் ஆளாக நான் தடுப்புக் காவலுக்கு செல்ல தயார் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் தெரிவித்துள்ளார்.ராஜஸ்தானின் ஜெய்பூர் பகுதியில் சிஏஏ.,வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு முன்னறிவிப்பு இல்லாமல் சென்ற முதல்வர் அசோக் கெலட், போராட்டக்காரர்களிடம் பேசினார். அப்போது

இந்த செய்தியை கேட்க

ஜெய்பூர் : என் பெற்றோரின் பிறப்பிடம் பற்றி எனக்கு தெரியாது. அதனால் முதல் ஆளாக நான் தடுப்புக் காவலுக்கு செல்ல தயார் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் தெரிவித்துள்ளார்.



latest tamil news




ராஜஸ்தானின் ஜெய்பூர் பகுதியில் சிஏஏ.,வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு முன்னறிவிப்பு இல்லாமல் சென்ற முதல்வர் அசோக் கெலட், போராட்டக்காரர்களிடம் பேசினார். அப்போது அவர், நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பாதுகாக்க சிஏஏ.,வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அரசியல் சாசன மாண்புக்கு எதிரான சிஏஏ., குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அமைதியை பாதுகாக்க அரசே முன் வந்து இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.


latest tamil news




காங்.,ம் எனது அரசும் போராட்டக்காரர்களின் பக்கம் இருக்கும். தேவைப்பட்டால் முதல் ஆளாக நானே சிறைக்கு செல்வேன். என்பிஆர்.,க்கு பெற்றோரின் பிறப்பிடம் பற்றி தகவல் கேட்கிறார்கள். ஒருவேளை என்னால் தகவல் தர முடியவில்லை என்றால், நானும் தடுப்பு காவலில் இருக்க தயார். எனக்கு என் பெற்றோரின் பிறப்பிடம் பற்றி தெரியாது. அசாமில் ஆளும் பா.ஜ., அரசே என்ஆர்சி.,யை அமல்படுத்த மறுப்பு தெரிவித்துள்ளது.

அரசுக்கு சட்டங்களை உருவாக்கும் உரிமை உண்டு. ஆனால் மக்களின் உணர்வுகளின் அடிப்படையிலேயே ஆட்சி செய்ய வேண்டும். டில்லியில் ஷாஹின் பாக் பகுதியை போன்று ராஜஸ்தான் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் சிஏஏ.,வுக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. மக்களின் உணர்வுகளை அரசு புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுடலைகாண் - சென்னை,இந்தியா
16-பிப்-202010:13:47 IST Report Abuse
சுடலைகாண் குடியுரிமைன்னு சொன்ன போராடுவீங்க ? ஆனா இதே ஆதாரம் இருந்தாதான் இட ஒதுக்கீடு அரசு வேலை வாய்ப்பு சலுகை அரசியல் வேட்புமனு தாக்கல் செய்யமுடியும்னு சொல்லிருக்கணும் ஒவொருத்தணும் இன்னேரம் ஆதாரங்களை அள்ளிட்டு வந்திருப்பானுக . நீங்க தேசத்தை பத்தி பேசறீங்க...CAA சட்டமாகி இவளவு நாட்கள் ஆகியும் எந்த முஸ்லிமும் நாட்டை விட்டு வெளியேற்ற படவில்லை பிறகு ஏன் இப்படி பொய் பிரச்சாரம்
Rate this:
Cancel
சுடலைகாண் - சென்னை,இந்தியா
15-பிப்-202022:37:51 IST Report Abuse
சுடலைகாண் இந்த துரோகிகளின் போராட்டத்தின் மீது கோர்ட்டில் வழக்கு தொடர ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? இங்கு தமிழ்நாட்டில் சில கட்சி தலைவர்கள் இதை வைத்து மதக்கலவரத்தை தூண்டிவிடுவார்களோ என தோன்றுகிறது.இசுலாமிய மக்களின் இந்த போராட்ட ஆதரவு அவர்கள் மீது இருந்த நம்பிக்கையை குலைக்கும் விதமாக உள்ளது . தமிழக கட்சி தலைவராகள் மற்றும் பொய் செய்திகளை பரப்பிய ஊடகங்களின் மீது வழக்கு போட வேண்டும்
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
15-பிப்-202022:32:46 IST Report Abuse
konanki Abcd சவூதி அரேபியா முஸ்லிம் மத சட்டங்களின் படி அரசாங்கம் நடத்தும் நாடு. அங்கு ஹிந்து கோவில்கள் இல்லை. சீக்கிய குருத்வாரா இல்லை. அங்கு எந்த நாட்டு அகதிகளுக்கும் முஸ்லிம்களாக இருந்தாலும் உள்ளே விடுவதில்லை. விசா கொடுப்பதில்லை என்ற தெளிவான கொள்கை முடிவு எடுத்து கடுமையாக பின் பற்றுகிறார்கள்‌ . அங்கிருந்து கொண்டு இந்திய அரசாங்கத்தை எதிர்த்து போராடுங்கள் என்று தூண்டும் நீங்கள் ஏன் அங்கு வாழும் ஹிந்துக்களுக்கு வழிபடுவதற்கு ஒரு நகரத்திற்கு ஒரே ஒரு கோவிலாவது கட்ட அனுமதி தர வேண்டும் என்று பேராடா காங்கிரஸ் திமுக கம்யூனிஸ்ட் கட்சிகளை தூண்ட மாட்டிர்களா?
Rate this:
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
16-பிப்-202012:33:35 IST Report Abuse
Ab Cdஉங்கள் கேள்வி எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது என்பது நடுநிலையாளர்களுக்கு தெரியும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X