பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் விவகாரத்தில் தலையிட கூடாது: துருக்கிக்கு இந்தியா பதில்

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (10+ 19)
Advertisement
India,Turkey, President, J&K, Pak, pakistan, kashmir, Foreign Ministry, spokesperson, RaveeshKumar, Interfere, இந்தியா, பாகிஸ்தான், பாக், துருக்கி, காஷ்மீர், ரவீஸ்குமார், வெளியுறவுஅமைச்சகம், பயங்கரவாதம், அச்சுறுத்தல்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: காஷ்மீர் குறித்த விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்தி கொண்டு, பாகிஸ்தானால் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து, துருக்கி புரிந்து கொள்ள வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, கடந்த ஆண்டு, ஆகஸ்ட், 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல நாடுகளிடம், புலம்பித் தள்ளியது. ஆனால், சீனா மட்டுமே, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. மற்ற நாடுகள், அது, இந்தியாவின் உள்விவகாரம் என கூறி ஒதுங்கி விட்டன.

இந்த விவகாரத்தில், இஸ்லாமிய நாடுகள் கூட, பாகிஸ்தானை ஆதரிக்க வில்லை. மேற்காசிய நாடான துருக்கி மட்டுமே, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. இதற்கு, இந்தியா, அப்போதே சரியான பதிலடி கொடுத்தது. இந்நிலையில், துருக்கி அதிபர் எர்டோகன், இரண்டு நாள் பயணமாக, பாகிஸ்தானுக்கு நேற்று வந்தார். அந்நாட்டு பார்லிமென்டின் கூட்டு கூட்டத்தில், நேற்று பேசினார்.

அதன் விபரம்: பயங்கரவாத பிரச்னையில், எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதி நடவடிக்கைக்கான சிறப்பு குழு, பாகிஸ்தானை, சாம்பல் பட்டியலில் வைத்துள்ளது. கறுப்பு பட்டியலில் சேர்க்க, சில நாடுகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்த விவகாரத்தில், சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை மீட்க, துருக்கி தொடர்ந்து ஆதரவு தரும். ஜம்மு- காஷ்மீர் விவகாரம், பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, துருக்கிக்கும் நெருக்கமானது. இந்தப் பிரச்னைக்கு, படை பலத்தால் தீர்வு காண முடியாது. அமைதி பேச்சு வழியாக தான், தீர்வு காண வேண்டும். காஷ்மீர் சகோதர, சகோதரிகள், பல ஆண்டுகளாகவே கடும் துன்பத்தை சந்தித்து வருகின்றனர். அதிலும், இந்தியா எடுத்த தன்னிச்சையான நடவடிக்கையால், இந்தப் பிரச்னை மேலும் சிக்கலாகியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு துருக்கி, தொடர்ந்து ஆதரவு தரும்.இவ்வாறு, அவர் பேசினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறியதாவது: காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி. காஷ்மீர் குறித்த துருக்கியின் கருத்துகளை நிராகரிக்கிறோம். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை துருக்கி நிறுத்தி கொண்டு, உண்மை நிலையை புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறோம். இந்தியா மற்றும் இந்த பிராந்தியத்தில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளால் உண்டான அச்சுறுத்தல் குறித்து புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10+ 19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanjay - Chennai,இந்தியா
16-பிப்-202007:17:31 IST Report Abuse
Sanjay சூசைக்கும் துருக்கி நாட்டிற்கும் மிகுந்த நட்புணர்வு உண்டு.
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - Kampala,உகான்டா
16-பிப்-202000:20:18 IST Report Abuse
Sampath Kumar It's our own country for indians, any body in our country can treat as guest only, let's live as fri in our country what they have there as per law, nothing much like to import further more, GOD GRACE YOU ALL STARTING FIGHTHING WITH ALL YOUR LOVED ❤😘INDIANS, FEELING ASAME ABOUT your behavior, thanks.
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - Kampala,உகான்டா
15-பிப்-202023:57:17 IST Report Abuse
Sampath Kumar Think is that by ing jobs irrespective of any community, we shall prefer, meantime let him for NSSF Or our para military to understan the real love our country, by the way I hope they love our nation, thanks
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X