சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாராபுரத்தில் அ.தி.மு.க., நிர்வாகி மீது தாக்குதல்

Added : பிப் 15, 2020
Advertisement

தாராபுரம் : சென்னை வண்ணாரப்பேட்டையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது கல்வீசப்பட்டதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். இதனை கண்டித்து நேற்று இரவு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நான்கு இடங்களில் சாலை மறியல் நடந்தது. இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைந்து போக செய்தனர். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தாராபுரத்தை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகி ரவி என்பவர் ஒழுங்குபடுத்தி கொண்டிருந்தார். அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில், ரவியை சிலர் தாக்கிவிட்டு சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X