முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மீது பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
Jammu, Kashmir, IAS, ShahFaesal, PSA, காஷ்மீர், ஷாபெஷால், பொதுபாதுகாப்புசட்டம்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி ; முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் கட்சி தலைவருமான ஷா பெசால் மீது பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்டில் ரத்து செய்தது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, தேசிய மாநாட்டு கட்சி தலைவர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பரூக் அப்துல்லா, ஏற்கனவே பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


latest tamil news


ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோரும், சமீபத்தில் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைபிடிக்கப்பட்டனர். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை, ஒரு ஆண்டுக்கு எந்த விசாரணையும் இன்றி, சிறையிலோ, வீட்டுக்காவலிலோ வைத்திருக்க முடியும்.இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஷா பெசால் மீதும் பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. பெசால் அவரது வீட்டில் சிறை வைக்கப்படுவாரா அல்லது தொடர்ந்து எம்.எல்.ஏ.,க்கள் விடுதியிலேயே சிறை வைக்கப்படுவாரா என்பது குறித்து தகவல் இல்லை.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh - Bangalore,இந்தியா
16-பிப்-202009:10:03 IST Report Abuse
Ramesh IAS turned politicians and creating problems by inciting type of speech... Such type of people should be kept in their HOME for their life period , if required. J&K is slowly returning to NORMALCY after taking control on it. Otherwise our so called Media Glorify killings along with Communist, Congress, Mufti , Abdullah etc....Let them take rest for few years in HOME
Rate this:
Share this comment
Cancel
Chowkidar Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து
16-பிப்-202007:44:35 IST Report Abuse
Chowkidar Modikumar அப்படியே தமிழ் நாடு பக்கம் இப்போது பொது பாதுகாப்பு சட்டம் கொண்டு வராவிட்டால் இன்னும் சில மாதங்களில் தமிழகம் காஷ்மீரில் இருந்த நிலையை விட பாதுகாப்பு மோசமாகும். தமிழகத்தில் வெளிநாட்டு தீவிரவாதிகளின் நடமாட்டம் இல்லை, ஆனால் அரசியல் கட்சி என்ற போர்வையில் 99 சதவிகித அரசியல் கட்சிகள் வெளிநாட்டு கரன்சிகளுக்கு அடிமையாகி இந்தியன் என்ற உணர்வு இல்லாமல் பிரிவினை வாத போக்கை கடைபிடித்து தமிழ் மக்களின் மனதில் பிரிவினை வாதம் என்ற விழ விதையை விதைக்க முற்பட்டுள்ளனர். தமிழகத்திலும் பொதுபாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தி ஸ்டாலின் , வைகோ, சீமான் , மோகன் சி லாசரஸ், ப சிதம்பரம் என 5 க்கு குறைவான இந்த அரசியல் வியாதிகளை சிறையில் தள்ளினால் தமிழகம் காப்பாற்றப்படும். இல்லையேல் தமிழக மக்கள் சோமாலியா போன்ற சூழ்நிலையை விரைவில் அனுபவிக்க தயாராக வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
ravi - coimbatore,இந்தியா
15-பிப்-202022:40:02 IST Report Abuse
ravi எல்லாவற்றையும் மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்... தன் வினை தன்னை சுடும் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X