பொது செய்தி

இந்தியா

டிரம்ப்பின் 3 மணி நேர வருகைக்கு ரூ.100 கோடி செலவு

Added : பிப் 15, 2020 | கருத்துகள் (35)
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஆமதாபாத் : அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆமதாபாத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் 3 மணி நேரம் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக ரூ.100 கோடி மாநில அரசு சார்பில் செலவிடப்பட உள்ளது.





அமெரிக்க அதிபர் டிரம்ப் பிப்.,24 மற்றும் 25 ஆகிய நாட்களில் இந்தியா வர உள்ளார். பிப்.,24 ம் தேதி குஜராத்தின் ஆமதாபாத் நகரில் கட்டப்பட்டுள்ள மிக பிரம்மாண்டமான மைதானத்தை அவர் திறந்து வைக்க உள்ளார். சுமார் 3 மணிநேரம் இவ்விழாவில் கலந்து கொள்ள வரும் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.100 கோடியை மாநில அரசு செலவிட உள்ளது.




டிரம்ப் செல்லும் பாதையில் உள்ள சாலைகளை சீரமைக்கவும், புதிய சாலைகள் அமைக்கவும் ரூ.80 கோடி, பாதுகாப்பிற்காக ரூ.12 முதல் 15 கோடி, விழாவிற்கு வரும் ஒரு லட்சம் விருந்தினர்கள் வந்து செலவதற்காக ரூ.7 முதல் 10 கோடி, நகரை மலர்கள் உள்ளிட்டவைகளால் அழகுபடுத்த ரூ.6 கோடி, மோடி-டிரம்ப் வரும் பாதையில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த ரூ.4 கோடி செலவிடப்பட உள்ளது.

இந்த ரூ.100 கோடியில் சில கோடிகளை மத்திய அரசு வழங்கி இருந்தாலும், பெரும்பாலான தொகை மத்திய அரசே ஒதுக்கி உள்ளது. சாலைகளை சீரமைப்பிற்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடியில், குறிப்பிட்ட அளவு தொகை டிரம்ப் வருகைக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக ஆமதாபாத் நகராட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
16-பிப்-202012:06:02 IST Report Abuse
Gnanam எத்தனை கோடிகள் செலவு செய்தாலும், அவை நம் நாட்டிற்குள்ளேயே இருக்கும், டிரம்ப் ஒன்றும் எடுத்துச்செல்லமாட்டார். நாட்டில் மக்களுக்கு வேலை கிடைப்பதுவும், சாலைகள் செம்மை படுத்துவதும் எல்லாம் நாட்டு மக்களுக்காகத்தான்.
Rate this:
Share this comment
Cancel
ராமநாதன் நாகப்பன் டிரம்ப் வருகை இந்தியாவுக்கு லாபமா இல்லையா என்பதை விட அமெரிக்காவுக்கு லாபம் என்பதை உலகப் பத்திரிகைகள் விலாவாரியாக எழுதி வருகின்றன. பால்(milk) இறக்குமதிக்கு இதுவரை நாம் வெளிநாட்டிற்கு அனுமதித்ததில்லை. ஆனால் ஐயா மோடி அதை மாற்ற முடிவெடுத்திருக்கிறார். பால் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா தான் முதன்மையான நாடு அப்படியிருக்கையில் பால் இறக்குமதி செய்யவேண்டிய அவசியம் இந்தியாவிற்கு துளி கூட இல்லை. இருப்பினும் ஐயா மோடி இதை செய்ய முடிவெடுத்திருக்கிறார். எல்ஐசி விற்பனையை போல நல்லவைகளை எல்லாத்தையும் விட்டுவைக்காமல் இப்படிப் பல காம்ப்ரமைஸ் செய்து கொண்டு டரம்பை வரவேற்பது அவருக்குத்தான் லாபம் நமக்கு இல்லை. மோடி எதை செய்தாலும் அதை ஆகா ஓகோ என்று எழுதுவதும் கண்ணை கட்டிக்கொண்டு நம்புவதும் இங்கே வழக்கமாக இருப்பதால் இந்த அரசின் போக்கை எண்ணி வருந்துவதை தவிர ஒன்றும் செய்ய முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
16-பிப்-202006:41:59 IST Report Abuse
Mani . V இதென்னங்க, இளித்தாய் மக்களின் வரிப்பணம் தானே செலவு பண்ண கசக்குமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X