பொது செய்தி

இந்தியா

ஐதராபாத் மசூதியில் முதல் முறையாக யோகா வகுப்பு

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (24)
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஐதராபாத் : ஐதராபாத்தில் உள்ள பழமையான மசூதி ஒன்றில் நாட்டிலேயே முதல் முறையாக யோகா உள்ளிட்ட வகுப்புக்கள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.







உடல் பருமன், தொற்றா நோய்களுக்கு எதிராக போராடும் வகையில் இந்த ஏற்பாட்டினை மசூதி நிர்வாகம் செய்துள்ளது. தட்பன் பகுதியில் நவாப் ஷாகிப் குந்தாவில் உள்ள மஸ்ஜித் இ இஷாக் மசூதியில் உள்ள 3 தளங்களும் சுகாதார மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் யோகாவும் கற்றுத்தரப்படுகிறது.

இது பற்றி மசூதியில் மருத்துவ ஆலோசனை வழங்கி வரும் முஸ்தபா ஹசன் அன்சாரி கூறுகையில், இப்பகுதியில் வாக்கிங் மற்றும் வெளிப்புறத்தில் உடற்பயிற்சி செய்வதற்கு நேரான சந்துகள் இல்லை. அதனால் யோகா ஆசனங்களை கற்றுத்தர மசூதி நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இங்கு ஆசனங்கள் கற்றுதருவதுடன், சில நோயாளிகளுக்கு யூட்யூப் லிங்க்.,கள் மூலம் மொபைல் போனிலேயே யோகா கற்கவும் ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.




உடல் பருமனால் இதய நோய் பிரச்னை உள்ள ஏராளமான பெண்கள் மசூதிக்கு வந்து மருத்துவ ஆலோசனைகளை பெற்றுச் செல்கின்றனர். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு அடிப்படையிலும், யோகா குறித்து உலக சுகாதார மையம் வழிகாட்டுதலின் பேரிலும் மசூதியில் யோகா கற்றுதரும் நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது. உடற்பயிற்சி, உணவுமுறை, வாழ்க்கை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசகர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் ஏராளமானோர் இதனால் பயனடைந்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
16-பிப்-202007:31:36 IST Report Abuse
Nallavan Nallavan யோகாவுக்கு மதம் ஒரு தடையல்ல ..... முயற்சிப்போர் நலனடையலாம் ..... பலனடையலாம் .....
Rate this:
Share this comment
Cancel
16-பிப்-202004:01:11 IST Report Abuse
Ganesan Madurai குனிஞ்சு நிமிந்தா யோகான்னா உலகில் சித்தாள் தான் பெரிய யோகி.
Rate this:
Share this comment
Cancel
16-பிப்-202003:59:24 IST Report Abuse
Ganesan Madurai தற்போது முஸ்லிம் யோகா என தமது யோகா கலையை திரிபு செய்து வேண்டும் என்றே அதில் வரும் ஓம் மற்றும் சமஸ்கிருத மந்திரங்களை மாற்றி குரானில் இருந்து கண்டது கேட்டது என எதையோ சேர்ந்து ஒரு முல்லா கூட்டம் ஏமாத்துகிறது. அதாவது இவர்கள் அல்லாவை மட்டும் கும்பிடுவதால், உண்மையான யோகாவை செய்தால் மதசார்பு தீட்டு பத்திக்குமாம். இந்த அந்நியாயத்தை எந்த கான்கிரஸ் கம்யூனிஸ்ட் திருட்டு திராவிட கூமுட்ட அரசியல்வாதிகளும் கேட்ட மாட்டானுங்க. இந்த பிராடு அமெரிக்கா கண்டத்திலும் கொடி கட்டி பறக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X