ரஜினி மலை; அஜித் தல : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி மலை; அஜித் தல : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (48)
Share

இந்த செய்தியை கேட்க

விருதுநகர் : ரஜினி மலை. அஜித் தல. ரஜினிக்கு நிகர் அஜித் மட்டுமே என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.



latest tamil news



விருதுநகரில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இது அதிமுக.,வின் கடைசி பட்ஜெட் அல்ல. அடுத்து வர போகும் அதிமுக ஆட்சிக்கான முதல் பட்ஜெட். வரியில்லாத பட்ஜெட். யாரையும் பாதிக்காத பட்ஜெட். வரி இல்லாத பட்ஜெட் என்பதால் நிதி பற்றாக்குறை வருவது சகஜம். இது காலம் காலமாக வருவது. இது பொருளாதார நிபுணர்களுக்கு, சமூக ஆர்வலர்களுக்கு, மக்களுக்கு, அரசியல் வல்லுநர்களுக்கு புரியும். திமுக ஆட்சியும் இந்த கடன் சுமை, நிதி பற்றாக்குறை பிரச்னை இருந்தது. இது முத்தான பட்ஜெட்.

அதிமுக, திமுக.,விற்கு பட்ஜெட் போட தெரியவில்லை என கூறும் கமல் முதலில் ஒரு பஞ்சாயத்து தலைவராக வந்து பட்ஜெட் போட்டு, எப்படி சரியாக போடுகிறார் என பார்த்து விட்டு அவரது கருத்தை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை பார்க்கலாம். திமுக.,விற்கு மக்கள் வாய்ப்பளிக்க தயாராக இல்லை. அதிமுக ஆட்சியில் இருக்கும் பிரச்னைகள் யாரால் உருவாக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.


latest tamil news



அதிமுக ஆட்சியில் பல திட்டங்கள் துவக்கப்பட்டு, மக்களின் குறைகள் கேட்கப்பட்டு, தீர்த்து வைக்கப்படுகிறது. இதை பொறுக்க முடியாமல் ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். அவர்கள் ஆட்சியில் மின்சாரமே கிடையாது. 16 மணி நேரம் மின்வெட்டு இருந்ததால் மக்கள் அமைச்சர்களை விரட்டி, விரட்டி அடித்த சம்பவம் திமுக ஆட்சியில் நடந்தது. ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் என்பதால் பட்ஜெட் பற்றி வசைபாடுகிறார்.

விஜய் வீட்டில் நடந்த ஐடி., ரெய்டுக்கும், அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதில் அரசியல் தலையீடு ஏதும் இல்லை. அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரஜினிக்கு நிகர் யாரும் கிடையாது. அவருக்கு நிகரான நடிகர் அஜித் மட்டுமே. ரஜினி மலை. அஜித் தல. இரண்டும் ஜல்லிக்கட்டு காளைகள் என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X