ரன்வேயில் சீறிப்பாய்ந்த ஜீப் : ஏர் இந்தியா விமானம் சேதம்| Dinamalar

ரன்வேயில் சீறிப்பாய்ந்த ஜீப் : ஏர் இந்தியா விமானம் சேதம்

Added : பிப் 15, 2020 | கருத்துகள் (12)
Share
புனே : விமான ஓடுபாதையில் வேகமாக ஜீப் ஒன்று வந்ததாலும், ஆள் ஒருவர் நின்று கொண்டிருந்ததாலும் உடனடியாக டேக் ஆப் செய்ததால் ஏர் இந்தியா விமானத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.இன்று காலை 7.30 மணியளவில் புனேவில் இருந்து டில்லிக்கு புறப்பட்டுவதற்காக ஏர் இந்தியாவின் ஏ321 விமானம் தயாராக இருந்தது. விமானம் பறப்பதற்காக ஓடுபாதையில் சுமார் 222 கி.மீ., வேகத்தில் ஓடத் துவங்கியது.

இந்த செய்தியை கேட்க

புனே : விமான ஓடுபாதையில் வேகமாக ஜீப் ஒன்று வந்ததாலும், ஆள் ஒருவர் நின்று கொண்டிருந்ததாலும் உடனடியாக டேக் ஆப் செய்ததால் ஏர் இந்தியா விமானத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.



latest tamil news


இன்று காலை 7.30 மணியளவில் புனேவில் இருந்து டில்லிக்கு புறப்பட்டுவதற்காக ஏர் இந்தியாவின் ஏ321 விமானம் தயாராக இருந்தது. விமானம் பறப்பதற்காக ஓடுபாதையில் சுமார் 222 கி.மீ., வேகத்தில் ஓடத் துவங்கியது. அப்போது ஓடுபாதையின் எதிரில் ஜீப் ஒன்று வேகமாக வருவதையும், ஆள் ஒருவர் நின்று கொண்டிருந்ததையும் விமானி பார்த்துள்ளார். இதனால் விபத்தை தவிர்ப்பதற்காக உடனடியாக விமானத்தை டேக் ஆப் செய்து, பறக்க செய்தார்.


latest tamil news


இந்த சம்பவம் காரணமாக விமானத்தின் முன் அடிப்பகுதி சேதமடைந்தது. இருந்தும் விமானம் தொடர்ந்து பறந்து, காலை 10.15 மணியளவில் டில்லியில் பத்திரமாக தரையிறங்கியது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சேதமடைந்த விமானம் வானில் பறக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X