பொது செய்தி

இந்தியா

மார்ச் 31க்கு பிறகு பான் கார்டு செல்லாதா?

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி : ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால் இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பான் கார்டு செல்லாது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.பான் கார்டை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு ஏற்கனவே 8 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 2019,டிசம்பர் 31 ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு பின்னர் மீண்டும் மார்ச் 31 வரை

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால் இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பான் கார்டு செல்லாது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.latest tamil news


பான் கார்டை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு ஏற்கனவே 8 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 2019,டிசம்பர் 31 ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு பின்னர் மீண்டும் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய நேரடி வரிவிதிப்பு கழகம் புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.


latest tamil news


இதில், 2017 ஜூலை 1 ம் தேதிக்கு பிறகு பான் கார்டு பெற்றவர்கள், பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்க தவறினால் 2020ம் ஆண்டு மார்ச் 31 க்கு பிறகு பான் கார்டு செல்லாது. உடனடியாக அவர்களின் பான் எண் ரத்து செய்யப்படும். ஒருவேளை பான் கார்டு செல்லாமல் போய் விட்டால் அதன் பிறகு வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் எந்த இடத்திலும் பான் எண்ணை குறிப்பிடவோ, பயன்படுத்தவோ முடியாது. ஒருவேளை மார்ச் 31 ம் தேதிக்கு பிறகு பான் - ஆதார் எண் இணைக்கப்பட்டால், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட நாள் முதல் பான் கார்டு மீண்டும் செயல்பட துவங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
atara - Pune,இந்தியா
19-பிப்-202018:23:11 IST Report Abuse
atara Give back refund money from Income tax department since for PAN Card they have taken money of Rs. 82 , And Agent charges for PAN Card. So need Rs. 1000 refund to Bank account from Income tax department for every individual who using PAN card so rest of people will thier Aadhar details then PAN Card and income tax department itself can be closed. There is no need of Income tax department and RTO department in India . All Earnings make TAX free , since GST is there why still to use Income tax and IT filing reports for individuals.
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
16-பிப்-202011:37:25 IST Report Abuse
karutthu இந்த ஆட்சியாளர்களுக்கு வேறு வேலையே கிடையாதா அல்லது நமக்கு வேறு வேலை இல்லை என நினைச்சட்டங்களா புதுசு புதுசா சொல்றாங்களே முன்பு வருமானவரி பார்ம் வருமானவரி அலுவலகத்தில் கொடுத்தோம் பிறகு அதை ஈ பைல் பண்ணனும் என்று சொன்னாங்க ஆனால் இதை ஆடிட்டர் மூலம் பண்ணவேண்டி இருக்கிறது. ஈ பைல் பண்ண ஐநூறு ரூபா கேட்கிறாங்க ....இப்போ ஆதார் + பான் கார்டு இணைக்கணும்னு சொல்றாங்க சேச்சே என்ன எழவுடா இந்த அரசாங்கம் நம்மளை இப்படி கஷ்டப்படுத்துது எல்லாத்துக்கும் காரணம் இந்த சிதம்பரம் பயல் தான்
Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
17-பிப்-202010:06:38 IST Report Abuse
Yaro Oruvanஆதார் பாண் இணைப்பு வெறும் இரண்டு நிமிடத்தில் ஆன்லைனில் செய்யலாம்.. நீங்க மேல செஞ்சிருக்குற கமெண்ட் அடிக்க எடுத்த காலத்தைவிட ஆதார் பாண் இணைப்பு விரைவில் முடிக்கலாம் .. இதை செய்வதால் பல முறைகேடுகளை தவிர்க்க அரசுக்கு வாய்ப்பு கிட்டும்.. சும்மா அரசை குறை சொல்வதே வாடிக்கையா இருந்தா எப்புடி ?...
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
15-பிப்-202022:07:16 IST Report Abuse
m.viswanathan எதையாவது சொல்லி மக்களை பயமுறுத்திக்கிட்டே , ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன
Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
17-பிப்-202010:09:33 IST Report Abuse
Yaro Oruvanஇதுல என்ன பயமுறுத்தல்.. ஆன்லைன்ல ஆதார் பாண் லிங்க்ன்னு தேடுனா இரண்டு நிமிடத்துல செஞ்சிரலாம்.. பணம் அதிகம் புழங்கும் இடங்களில் ஆதார் விபரம் கேட்கப்படுகிறது.. அது வருமான வரித்துறைக்கு உதவியாக இருக்கவே இந்த இணைப்பு.. இதுக்கு எதுக்கு ஒன்னய பயமுறுத்தணும்? வரி ஏய்ப்பு திருடனுங்கதான் பயப்படுவானுவ.. வசதி எப்டி?...
Rate this:
m.viswanathan - chennai,இந்தியா
17-பிப்-202022:25:54 IST Report Abuse
m.viswanathanமுதல்ல கங்கையையும் , காவிரியையும் இணையுங்க , சும்மா கலர், கலரா , நோட் அடிக்கிறதை நிறுத்துங்க , நல்ல வசதியா தான் வரி கட்டிக்கிட்டு இருக்குமுங்கோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X