மார்ச் 31க்கு பிறகு பான் கார்டு செல்லாதா?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மார்ச் 31க்கு பிறகு பான் கார்டு செல்லாதா?

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (16)
Share

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால் இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பான் கார்டு செல்லாது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.



latest tamil news


பான் கார்டை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு ஏற்கனவே 8 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 2019,டிசம்பர் 31 ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு பின்னர் மீண்டும் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய நேரடி வரிவிதிப்பு கழகம் புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.


latest tamil news


இதில், 2017 ஜூலை 1 ம் தேதிக்கு பிறகு பான் கார்டு பெற்றவர்கள், பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்க தவறினால் 2020ம் ஆண்டு மார்ச் 31 க்கு பிறகு பான் கார்டு செல்லாது. உடனடியாக அவர்களின் பான் எண் ரத்து செய்யப்படும். ஒருவேளை பான் கார்டு செல்லாமல் போய் விட்டால் அதன் பிறகு வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் எந்த இடத்திலும் பான் எண்ணை குறிப்பிடவோ, பயன்படுத்தவோ முடியாது. ஒருவேளை மார்ச் 31 ம் தேதிக்கு பிறகு பான் - ஆதார் எண் இணைக்கப்பட்டால், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட நாள் முதல் பான் கார்டு மீண்டும் செயல்பட துவங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X