இசை கச்சேரியால் பறிபோனது இளம் மாப்பிள்ளை உயிர்

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

நிஜாமாபாத் : தெலுங்கானாவில் ஒரு திருமணத்தில் அதிக சப்தமாக இசை கச்சேரியினர் இசைத்ததால் மாப்பிள்ளையின் உயிர் பறிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



latest tamil news



தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள போதன் என்ற கிராமத்தில் கணேஷ் (25) என்ற இளைஞருக்கு நேற்று திருமணம் நடந்தது. அதற்கு முன் திருமண வரவேற்பு நடந்தது. திருமண வரவேற்பு விழாவில் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் அதிக சப்தங்களுடன் கச்சேரி நடந்ததாக கூறப்படுகிறது. திருணம் முடிந்த பிறகு திடீரென மாப்பிள்ளை மயங்கி விழுந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் மாரடைப்பால் இறந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


latest tamil news



இது தொடர்பாக கணேஷின் பெற்றோர் கூறுகையில், திருமண வரவேற்பின் போது அதிக சப்தத்துடன் இசைக்கப்பட்ட கச்சேரியினால் அவரது உடல் நலன் பாதிக்கப்பட்டது. அதன் பிறகுதான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இவ்வாறு கூறினர். திருணமத்தின் போது இசைக் கச்சேரியால் இளம் மாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
18-பிப்-202005:49:07 IST Report Abuse
meenakshisundaram இசை உயிர் கொடுக்கும் என்று தான் இதுவரை கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் உயிரையே பறிக்குதா?
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
16-பிப்-202013:07:34 IST Report Abuse
D.Ambujavalli இந்த மரணத்தில் கூச்சலும் ஒரு காரணமாக இருக்கலாம் ஆனால் இந்த சிறு வயதில் மாரடைப்பு என்பது சற்று அதிகம்தான் அந்தப் பையனுக்கு ஏற்கெனவே ஏதாவது உடற்கோளாறு இருந்துள்ளதா என்றும் விசாரிக்க வேண்டும். இந்த இளைஞனின் சம்பவம் இருக்கட்டும் ஒரு திருமண வரவேற்பில் 40 வாத்தியங்களுடன் கச்சேரி நடந்தது, என் ஒன்றரை வயது பேரன் அழுகை ஓயவேயில்லை பெரியவர்களுக்கும் தலைவலி ஹாலைவிட்டு வீடு வந்த பின்னும் குழந்தையின் வீறிடல் நிற்கவில்லை. பின்பொருமுறை சென்று பரிசளித்து விசாரித்து வந்தோம்
Rate this:
Share this comment
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
16-பிப்-202012:30:40 IST Report Abuse
Asagh busagh இந்தியாவை பிடித்த கேடு இரைச்சல் மற்றும் ஒலி பொல்லுஷன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X