பொது செய்தி

இந்தியா

ராஜஸ்தான் வீராங்கனை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி: ராஜஸ்தான் மாநிலைத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.



latest tamil news



2020 ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஜப்பான் தலை நகர் டோக்கியோவில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை நடக்க உள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தானை சேர்ந்த 24 வயது நிரம்பிய பாவனா ஜாட், ராஞ்சியில் நடந்த ஏழாவது தேசிய ரேஸ் வாக் தடகள போட்டிகளில் பங்கேற்றார். அவர் 20 கிலோமீட்டர் பந்தய தூரத்தை 1 மணி நேரம் 29 நிமிடம் 50 நொடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்துள்ளார். அவர் போட்டிக்கான இலக்கை 1 மணி 31 நிமிடத்திற்குள் கடந்ததன் மூலம் இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.


latest tamil news



இதே போட்டியில் பங்கேற்ற மற்றொரு வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி 36 நொடிகள் தாமதமாக (1.31.36) கடந்து ஒலிம்பிக்கில் பங்குபெறும் வாய்ப்பை நழுவவிட்டார்.ஆண்களுக்கு நடந்த ரேஸ் வாக் போட்டியில் சந்தீப் குமார் என்பவர் தகுதி நேரமான 1 மணி 20 நிமிடத்தை 1 நிமிடம் 34 நொடி தாமதமாக கடந்து ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஆசிய ரேஸ் வாக் போட்டியில் கலந்து கொண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன் என்று கூறினார்

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aruna -  ( Posted via: Dinamalar Android App )
16-பிப்-202002:15:10 IST Report Abuse
Aruna வாழ்த்துக்கள் சினேகிதி.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
15-பிப்-202020:35:35 IST Report Abuse
K.Sugavanam நல் வாழ்த்துகள்.
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
15-பிப்-202019:14:08 IST Report Abuse
Nathan ராஜஸ்தான் காங்கி ஆளுதே. காங்கி நம்ம நாட்டை அழுத்த , போட்டியில் தோற்கத்தானே இதுவரை செய்தது. இப்ப இத்தாலி சூன்யம் அட்வைஸ் வருமோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X