பாகற்காய் கொண்டு வருகிறார் டிரம்ப்: சிவசேனா

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement

மும்பை: இந்தியாவை வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இருந்து அமெரிக்கா நீக்கியதற்கு சிவசேனா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.



latest tamil news



அமெரிக்க அதிபர் டிரம்ப், பிப். 24ம் தேதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில் இந்தியா, சீனா உள்ளிட்ட 24 நாடுகளை வளரும் நாடுகள் பட்டியலிலிருந்து அமெரிக்க வர்த்தக பிரநிதி குழு நீக்கியுள்ளது. அதற்கு பதிலாக இந்தியாவை வளர்ந்த பொருளாதாரம் கொண்ட நாடுகள் பட்டியலில் சேர்த்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த சிவசேனா கட்சி, இந்தியா வரும் டிரம்ப், இனிப்புக்கு பதில் பாகற்காய் கொண்டு வருகிறார் என்று தெரிவித்துள்ளது.


latest tamil news



'இதனால் உலக வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவுக்கு வழங்கும் மானியங்கள் பாதிக்கப்படும். இந்தியா கல்வி, ஆரோக்கியம், வேலைவாய்ப்பு, தூய்மை போன்ற விஷயங்களில் வளர்ந்த நிலையை எட்டுவதற்கு சில காலம் பிடிக்கும். அமெரிக்காவின் இந்த முடிவால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும். இந்தியா முழுமையாக வளர்ச்சியடையாத நாடாக இருக்கும் நிலையில், இந்தியாவுக்கு வழங்கப்படும் சலுகைகள் பாதிக்கப்படும்' இவ்வாறு சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohandas - sydney,ஆஸ்திரேலியா
17-பிப்-202007:38:38 IST Report Abuse
mohandas சிவா சேனா வென்றது பி.ஜே.பி கூட்டணியால் அனால் காங்கிரஸ் அடிவருடி மக்களை ஏமாற்றியுள்ளது. அமெரிக்கா பாகற்காய் தருவது இருக்கட்டும் நீங்கள் ஆல்வா கொடுப்பது makkalukku
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
16-பிப்-202013:44:12 IST Report Abuse
pattikkaattaan "பூனை கண்ணை மூடிக்கொண்டால், உலகமே இருண்டிருச்சுன்னு நினைக்குமாம் "... இந்த பழமொழி ஏனோ நினைவுக்கு வருகிறது ..
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு. - -மதராஸ்:-),இந்தியா
16-பிப்-202012:02:11 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு. நடு ரோட்டில் தான் நிப்பாட்டி வெச்சிருக்கார் உங்கள் இந்திய நண்பர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X