அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி விவகாரத்தில் ராமதாஸ் பல்டி

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
 ரஜினி விவகாரத்தில் ராமதாஸ் பல்டி

நடிகர் ரஜினியுடன் கூட்டணி அமைக்கும் விவகாரத்தில், பா.ம.க., திடீரென அந்தர் பல்டி அடித்து, அ.தி.மு.க., கூட்டணி நீடிக்கும் என அறிவித்துள்ளது.

வரும் சட்டசபை தேர்தலில், 50 தொகுதிகளை பா.ம.க.,வுக்கு ஒதுக்க, அ.தி.மு.க., தரப்பில் நடத்தப்பட்ட பேச்சு தான், இதன் பின்னணியாக உள்ளது. கடந்த, 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட வேண்டும் என, பா.ம.க., விரும்பியது. அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய, இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்று உருவாக வேண்டும் என்றும் நினைத்தது.


மறுப்பு


அதற்காகவே, 'மாற்றம் - முன்னேற்றம் - அன்புமணி' என்ற கோஷத்தையும், முதல்வர் வேட்பாளராக அன்புமணியையும் முன்னிலைப்படுத்தியது. தேர்தல் முடிவில், பா.ம.க.,வுக்கு, 5 சதவீத ஓட்டுகள் தான் கிடைத்ததே தவிர, ஒரு எம்.எல்.ஏ., கூட வெற்றி பெறவில்லை. இதையடுத்து, 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்தது. ஏழு தொகுதிகளில் போட்டியிட்டும், அன்புமணி கூட வெற்றி பெற முடியவில்லை.அ.தி.மு.க., தரப்பில், அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்பட்டது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., அணியில், பா.ம.க., போட்டியிட்டு, வெற்றியும் பெற்றது. இந்நிலையில், ரஜினியுடன், பா.ம.க., கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார். அதுபற்றிய கேள்விக்கு, ராமதாஸ் திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்காமல் நழுவினார். ராமதாஸ் பேட்டி, அ.தி.மு.க.,வில் அதிர்வலைகளை உருவாக்கியது. உடனே, அ.தி.மு.க., தரப்பிலிருந்து, ராமதாசுடன் பேச்சு நடத்தப்பட்டது.
சட்டசபை தேர்தலுக்கு, 45 முதல், 50 தொகுதிகள் வரை ஒதுக்குவது தொடர்பாக, முதல் கட்டமாக முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மறுநாளே, 'அ.தி.மு.க., கூட்டணியில், நாங்கள் நீடிக்கிறோம்' என, ராமதாஸ் அந்தர் பல்டி அடித்தார். ஆனால், திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததால், மாற்று ஜாதிகளின் ஓட்டுகள், பா.ம.க.,வுக்கு, இரண்டு, மூன்று தேர்தல்களில் கிடைக்கவில்லை. இதனால், ரஜினி கட்சி துவக்கிய பின், அவருடன் கூட்டணி வைத்தால், மற்ற ஜாதிகளின் ஓட்டுகள் கிடைக்கும்; பெரிய வெற்றி பெறலாம் என, ராமதாஸ் கருதுகிறார்.


மாற்றம் ஏற்படலாம்


இது குறித்து, பா.ம.க., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக அரசியலில் மாற்றத்தை, ரஜினி வாயிலாகவும், முன்னேற்றத்தை, அன்புமணி வாயிலாகவும் ஏற்படுத்த, ராமதாஸ் விரும்புகிறார். ரஜினி கட்சி துவக்கிய பின், அவர் தன்னை வந்து சந்திப்பார் என, ராமதாஸ் எதிர்பார்க்கிறார். ஐ.மு., கூட்டணி ஆட்சியில், சோனியா வழிகாட்டுதல் குழு தலைவராக இருந்ததுபோல், ரஜினி தலைமையில் அமையுள்ள கூட்டணிக்கு, ராமதாஸ் வழிகாட்டுதல் குழு தலைவராக இருப்பார்.

ராமதாஸ் கையில் எடுத்துள்ள சமூக நீதி கொள்கைக்கு, ரஜினி முன்னுரிமை கொடுக்க உள்ளார். சமூக நீதி, சமமான நீதி என்ற அடிப்படையில், அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கவும், தரமான குடிநீர், கல்வி கிடைப்பதற்கும் ராமதாசும், ரஜினியும் பாடுபடுவர். எனவே, ரஜினி கட்சி துவக்கிய பின், ராமதாஸ் முடிவில் மாற்றம் ஏற்படலாம். இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.


தைலாபுரத்தில் நாளை முடிவு?


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., வெற்றிக்கு சாதகமாக உள்ள இடங்கள் குறித்து ஆய்வு செய்ய, ராமதாஸ் முடிவு செய்துள்ளார். மேலும், அடுத்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா அல்லது ரஜினி கட்சி துவக்கிய பின், அவருடன் இணைந்து செயல்படுவதா என்பது குறித்தும், கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கவும், ராமதாஸ் முடிவு செய்துள்ளார். திண்டிவனம் அருகே உள்ள, தைலாபுரம் தோட்டத்தில், நாளை, மாநில நிர்வாகிகளுடன், இதுபற்றி ராமதாஸ் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
16-பிப்-202020:14:47 IST Report Abuse
Vijay D Ratnam ராமதாஸ் எப்போது எந்தப்பக்கம் பலடியடிப்பர் என்று யாரலும் கனிக்க முடியாது. அநேகமாக கடைசி நேரத்தில் அவர் இடம் மாறுவது அடிக்கடி நிகழும் ஒரு நிகழ்வுதான். தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் இருக்கும்போது திமுக கூட்டணியிருந்து திருமாவளவன் கழட்டிவிடப்பட்டு பாமக உள்ளே வர வாய்ப்பு அதிகம். பாமகவை சேர்த்தால் திமுக கூட்டணிக்கு ஒரு 80 முதல் 90 தொகுதி கன்பார்ம் என்பதால் ஸ்டாலின் நிச்சயம் பாமகவின் டிமாண்ட்டை ஏற்பார். அதிமுக பாஜக கூட்டணியில் ரஜினி சேர்ந்தால் வெற்றி நிச்சயம். ஆனால் முதல்வர் பதவியை அதிமுக ஒருபோதும் விட்டுத்தராது. ரஜினி ஒத்துக்கொள்வாரா என்பது கேள்வி.
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
16-பிப்-202018:38:46 IST Report Abuse
Nallavan Nallavan ஆமாங்க ........அதிமுக-பாஜக கூட்டணியில் ராமதாஸ் இருந்தா அவரைப் பல்டி மன்னன் -ன்னு சொல்லுவோம் ..... அதே ராமதாஸ் திமுக கூட்டணிக்கு வந்தா கொள்கை வீரர் -ன்னு சொல்லுவோம் .....
Rate this:
Cancel
KJAI - CHENNAI,இந்தியா
16-பிப்-202018:38:34 IST Report Abuse
KJAI . பதவிக்குக்காக. ஒவ்வரு முறையும் கூட்டணியை மாறிட்டிக்கொண்டே இருப்பர் . பதவிக்காக கொள்கையை அவ்வப்போது மாறுவர் ராமதாஸ் . இவரை பேசுவதற்கு ஒன்றும் இல்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X