அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுகவை வீழ்த்த முதல்வர் பழனிசாமி அதிரடி வியூகம்!

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (64)
Share
Advertisement
வியூகம், அதிரடி, இபிஎஸ், பழனிசாமி, திமுக, பிரசாந்த்_கிஷோர், ஐஏஎஸ்_அதிகாரிகள்

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த முதல்வர் பழனிசாமி புது வியூகம் வகுத்துள்ளார். ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சேர்க்க 100 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை களமிறக்கவும் தி.மு.க.வின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் தந்திரங்களை தவிடுபொடியாக்கவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழ்ந்து விடும் என்ற கருத்தை தி.மு.க. கூட்டணி கட்சியினர் தொடர்ந்து பரப்பி வந்தனர். ஆனால் மூன்று ஆண்டுகளை கடந்து 4வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பொறுத்தவரை அ.தி.மு.க. நிர்வாகத்திலும் ஆட்சி நிர்வாகத்திலும் அவ்வப்போது கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வார். இதன் வாயிலாக தவறு செய்பவர்கள் பதவி பறிக்கப்பட்டது. பலர் 'டம்மி' பதவிகளுக்கு மாற்றப்பட்டனர்.
இதனால் ஜெயலலிதாவிடம் பேசுவதற்கே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் பயந்தனர். அரசிற்கு தேவையான சில நல்ல கருத்தையும் சொல்ல முடியாத நிலைக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தள்ளப்பட்டனர். ஆனால் முதல்வர் பழனிசாமி மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டுமின்றி இளம் அதிகாரிகள் கூறும் ஆலோசனைகளையும் கேட்கிறார். நல்ல திட்டம் என்றால் செயல்படுத்துகிறார். எந்த நேரத்திலும் அவரை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் தொடர்பு கொள்ள முடியும்.

இந்நிலையில் சட்டசபை தேர்தலில் இணைந்து பணியாற்றுவதற்காக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் 'ஐபேக்' நிறுவனத்துடன் தி.மு.க. தலைமை ஒப்பந்தம் செய்துள்ளது. இவர்கள் அரசுக்கு எதிரான பணிகளில் கவனம் செலுத்தவுள்ளனர். மக்களிடம் நுாதன பிரசாரங்களை மேற்கொள்ள உள்ளனர்.

அதே நேரத்தில் பிரசாந்த் கிஷோருக்கு போட்டியாக பல்வேறு துறைகளின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முதல்வருக்கும் அரசுக்கும் ஆதரவாக களத்தில் இறங்க உள்ளனர். அரசு அறிவிக்கும் திட்டங்களை பல தரப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளை அவர்கள் தீவிரப் படுத்த உள்ளனர். சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின் இதுதொடர்பாக ரகசிய ஆலோசனை நடந்துள்ளது. அதில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் பங்கேற்றுள்ளனர். தி.மு.க.விற்கு ஒரு பிரசாந்த் கிஷோர் என்றால் அ.தி.மு.க.விற்கு 100 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் களமிறங்க உள்ளனர்.
அதன் வெளிப்பாடு தான் சமீபத்தில் தலைமை செயலர் சண்முகம் பேசிய பேச்சு. தேசிய வாக்காளர் தின விழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது: ஆட்சி அதிகாரத்திற்கு வர விளம்பர யுக்தியை சிலர் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசியல் ஆலோசகர்கள் உருவாகி உள்ளனர். இது அதிர்ச்சி அளிக்கிறது. நம் ஆட்கள் கூறாததையா வெளியாட்கள் வந்து சொல்வர். மக்களுக்கு என்ன தேவை என்பதை அவர்களிடம் கேட்டால் கூறுவர்; இதற்கு எங்கேயோ இருந்து வந்தவர் ஆராய்ச்சி செய்து சொல்வாராம்; அதை வைத்து அரசியல் செய்ய வேண்டுமாம். தொழில்நுட்பம் பெருக பெருக இந்த சவால்கள் அதிகரித்து வருகின்றன. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.

அவரது பேச்சு தி.மு.க.வை கொந்தளிக்க வைத்தது. அதற்கு பதிலடியாக அக்கட்சி தரப்பிலும் அறிக்கை தரப்பட்டது. ஆனாலும் அதிகாரிகளின் மனநிலையை இவரது பேச்சு வெளிப்படுத்தி விட்டதாகவே அரசியல் வட்டாரம் பார்க்கிறது. எனவே பழனிசாமியின் இத்திட்டம் தேர்தலில் பயனளிக்கும் என அமைச்சர்களும் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
19-பிப்-202010:53:04 IST Report Abuse
நக்கீரன் எப்படியோ திமுக அதிமுக இரண்டும் ஒழிந்தால் சரி. மக்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறோம்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
17-பிப்-202023:51:24 IST Report Abuse
Vena Suna பல ஓட்டைகள் இருக்கின்றன...அதை எல்லாம் சரி செய்யணும்...அதுல முக்கியமா சாலைகளில் இருக்கும் பெரிய பெரிய ஓட்டைகள்..ஹிஹிஹி
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
17-பிப்-202008:08:04 IST Report Abuse
கல்யாணராமன் சு. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் ........... அதிகாரிகள் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்படவில்லை (at least the direct appointments like IAS, IPS etc.,, who are ed by UPSC) .......... அவர்களுடைய வேலை அரசின் திட்டங்களை சரியே செயல்படுத்தி, அதன் பலன் மக்களை அடைகிறதா என்று கண்காணிப்பதுதான் ......... ஏற்கனவே IAS மற்றும் IPS அதிகாரிகளிடம் ஜாதி, இனம் சார்ந்த எண்ணங்களும் செயல்களும் பரவலாக இருக்கிறதென்ற எண்ணம் பலமாக வேரூன்றியிருக்கிறது ........ இதில் கட்சி சார்பும் சேர்ந்துவிட்டால், கேட்கவே வேண்டாம் ............ இந்த மாதிரியான செயல்களை கட்சி சார்பற்ற பொதுமக்கள் எதிர்க்கவேண்டும் ..........
Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
18-பிப்-202016:47:35 IST Report Abuse
Jaya Ramஅவர்கள் கூறுவதை சரியாக புரிந்து கொள்ளவேண்டும் , அதாவது அரசின் திட்டங்களை மக்களிடம் சென்று சேர்க்கவேண்டும் என்றுதான் கூறினார்களே தவிர அதிமுக கட்சியின் திட்டங்களை கொண்டு சேர்க்க சொல்லவில்லை மேலும் அதிகாரிகளின் ஆலோசனைகளை தவிர்க்காமல் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X