ரவிசங்கர் பிரசாத் மீது சசிதரூர் அவதுாறு வழக்கு

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

திருவனந்தபுரம்: மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மீது, காங்., எம்.பி., சசிதரூர் அவதுாறு வழக்கு தொடர்ந்துள்ளார்.



latest tamil news



சில ஆண்டுகளுக்கு முன், சசிதரூர், 'பிரதமர் மோடி, சிவலிங்கத்தில் அமர்ந்துள்ள தேள் போல கொடிய விஷமுடையவர்' என, கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு, 'மனைவி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சசிதரூருக்கு, மோடியை விமர்சிக்க தகுதிஇல்லை' என, ரவிசங்கர் பதிலடி கொடுத்தார். இதையடுத்து, டில்லி போலீசார், நீதிமன்றத்தில், தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை யில், 'சுனந்தா புஷ்கர் மரணம், கொலை அல்ல' என, தெரிவிக்கப்பட்டுள்ளதை, சசிதரூர் சுட்டிக் காட்டினார். அத்துடன், தன் மீது சுமத்திய அவதுாறு குற்றச்சாட்டை திரும்பப் பெறுமாறும், ரவிசங்கர் பிரசாத்திற்கு, 'நோட்டீஸ்' அனுப்பினார். இதற்கு, 'முதலில் மோடியை பற்றி பேசியதற்கு சசிதரூர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, ரவிசங்கர் பிரசாத் நிபந்தனை விதித்தார். இதை ஏற்காத சசி தரூர், நேற்று திருவனந்தபுரம் முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், ரவிசங்கர் பிரசாத் மீது அவதுாறு வழக்கு மனுவை தாக்கல் செய்தார்.


latest tamil news



இதையடுத்து, ரவிசங்கர் பிரசாத்திற்கு 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.5,000 அபராதம்பிரதமர் மோடியை, 'சிவலிங்கத்தில் அமர்ந்துள்ள கொடிய தேள்' என, கூறியது தொடர்பான அவதுாறு வழக்கில், 'நோட்டீஸ்' அனுப்பியும் ஆஜராகாத, காங்., - எம்.பி., சசிதரூருக்கு, டில்லி நீதிமன்றம், 5,000 ரூபாய் அபராதம் விதித்து உள்ளது. பா.ஜ., பிரமுகர் ராஜீவ் பப்பர், சிவனை வணங்கும் தன்னைப் போன்ற கோடிக் கணக்கான பக்தர்களின் மனதை, சசிதரூரின் கருத்து புண்படுத்தி விட்டதாக தொடர்ந்த வழக்கில், இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
swega - Dindigul,இந்தியா
16-பிப்-202013:50:48 IST Report Abuse
swega முதலில் அரசியல்வாதிகள் ஒழுங்காக, நாகரிகமாக பேசக்கற்றுக்கொள்ளவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Ram Sekar - mumbai ,இந்தியா
16-பிப்-202009:47:01 IST Report Abuse
Ram Sekar என்ன பயம்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
16-பிப்-202007:45:24 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ பிரதமர் மோடியை, 'சிவலிங்கத்தில் அமர்ந்துள்ள கொடிய தேள்' என, கூறியது தொடர்பான அவதுாறு வழக்கில், 'நோட்டீஸ்' அனுப்பியும் ஆஜராகாத, காங்., - எம்.பி., சசிதரூருக்கு, டில்லி நீதிமன்றம், 5,000 ரூபாய் அபராதம் விதித்து உள்ளது. //// மோதி அரசு உதவாமல் சசி தரூரின் மனைவி மர்ம மரண விஷயத்தில் உண்மை மறைக்கப்பட வாய்ப்பில்லை ..... சசி தரூர் தப்பிக்க வாய்ப்பில்லை ...... சசி தரூர் நேரடியாகவே அந்த மர்ம மரணத்தில் சம்பந்தப்பட்டிருக்கக் காரணங்கள் என்று குறிப்பிடப்பட்டு பத்து காரணங்கள் அப்பொழுது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன ......
Rate this:
Share this comment
blocked user - blocked,மயோட்
16-பிப்-202013:20:16 IST Report Abuse
blocked userசு சாமி சசிதரூரை விட்டுவிடப்போவது இல்லை. மோடியே வந்தாலும் சசிதரூருக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பார் சு சாமி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X