உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தேர்தல் ஆணையம் வரவேற்பு

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Supreme_Court,Election Commission, Vote, Candidate_bio data, Social media, தேர்தல் ஆணையம், சுப்ரீம்கோர்ட், வரவேற்பு, வேட்பாளர், விபரங்கள்

புதுடில்லி: 'அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் குற்றப் பின்னணி விபரங்களை, வலைதளங்களில் வெளியிட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, தலைமை தேர்தல் ஆணையம் வரவேற்றுஉள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், குற்றப் பின்னணி இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், உச்ச நீதிமன்றம், சமீபத்தில் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அறிக்கைஅதன்படி, அரசியல் கட்சிகள், வேட்பாளர்களை அறிவித்த, 48 மணி நேரத்திற்குள், அவர்களின் குற்றப் பின்னணி விபரங்களை, வலைதளம், பத்திரிகை மற்றும் மின்னணு ஊடகங்களில் வெளியிட வேண்டும்.

அத்துடன், குற்றப் பின்னணி உள்ளவர், வேட்பாளராக ஏன் தேர்வு செய்யப்பட்டார் என்பதையும் விளக்க வேண்டும். இது குறித்து, தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை, ஆணையம் மனதார வரவேற்கிறது. இது, தேர்தல் ஜனநாயக முன்னேற்றத்திற்கு, புதிய அளவுகோல்களை உருவாக்க துணை புரியும்.
விதிமுறைதேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக, 2018 அக்.,ல், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 'வேட்பாளர்கள், தங்கள் குற்றப் பின்னணி குறித்து, தேர்தல் பிரசார காலத்திற்குள், குறைந்தபட்சம் மூன்று முறை, டிவி மற்றும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இது நடைமுறையில் உள்ளது.இதனுடன், உச்ச நீதிமன்றம் புதிதாக பிறப்பித்த உத்தரவுகளும், தேர்தல் விதிமுறைகளில் சேர்க்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
16-பிப்-202008:56:48 IST Report Abuse
blocked user ஒவ்வொரு வழக்கும் எவ்வளவுநாள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது, எத்தனை முறை என்னென்ன காரணங்களுக்காக ஒத்தி வைத்து இருக்கிறார்கள், ஜாமீன் மற்றும் செலவு செய்யப்பட தொகை போன்ற தகவல்களையும் சேர்த்து வெளியிட்டால் நீதிமன்றத்தின் உண்மை முகம் பொது மக்களுக்கு தெளிவாக தெரியும். உதாரணத்துக்கு ஹெரால்டு மோசடி வழக்கு போகும் வேகத்தை பார்த்தால் இன்னும் பத்தாண்டுகளுக்காவது நடக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் சம்பந்தப்பட்ட அனைவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குக்களை ஓராண்டுக்குள் முடித்து வைத்திருக்க வேண்டும். மோசடி செய்தது சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது - அதாவது அடிப்படை பிரச்சினை. அதைக்கூட இன்னும் நீதித்துறையால் அடையாளம்காண முடியவில்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X