பொது செய்தி

இந்தியா

காகித பயன்பாடு குறைந்ததால் காப்பாற்றப்பட்ட 700 மரங்கள்

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

புவனேஷ்வர்: ''ஒடிசாவில், பட்ஜெட் தயாரிப்பு பணிகள், 'டிஜிட்டல்' முறைக்கு மாறியதால், காகிதம் தயாரிக்க பயன்படும், 700 மரங்கள் வெட்டப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளன,'' என, பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முந்தைய சட்டசபை கூட்டத்தில், மாநில கவர்னர் கணேஷி லால் கூறினார்.



latest tamil news



ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில், பிஜூ ஜனதா தளம் ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநில சட்டசபையில், வரும், 2020 -௨௧ம் நிதி ஆண்டுக்கான, பட்ஜெட் தாக்கல் செய்யப்படு வதற்கு முன் நடந்த கூட்டத்தில், கவர்னர் கணேஷி லால் கூறியதாவது: கடந்த, 2019-20ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், டிஜிட்டல் தொழில் நுட்பம் அதிகம் பயன்படுத்தப்பட்டதால், ஆவணங்கள் அச்சிடும் பணிகள் குறைந்தன.ஆவணங்களில் ஒரு பகுதி மட்டும், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டும் கூட, அதன் மூலம், 87 லட்சம் பக்கங்கள் அச்சிடும் பணிகள் குறைந்ததால், காகிதம் தயாரிக்கப் பயன்படும், 700 பெரிய மரங்கள் வெட்டப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளன.


latest tamil news



எதிர்காலத்தில், மாநில அரசு முழுமையாக காகிதமில்லா பட்ஜெட்டிற்கு மாற வேண்டும். தலைமை செயலகத்தில், அனைத்து துறை ஆவணங்களும், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு உள்ளதால், 'பைல்'களை எளிதில் கண்காணிக்கவும், எடுக்கவும் முடிகிறது. இதனால், காகித பயன்பாடு வெகுவாக குறைந்து உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் BSNL டெலிபோன் பில் ஒரு A 4 தாளில் கொடுத்ததை இப்போது இரண்டு தாள்களில் தந்தார்கள் பிறகு சுத்தமாய் நிறுத்தி விட்டார்கள் நல்லாட்சியில் 73 000 பேருக்கு கல்தா கொடுத்தார்கள் நேற்றைய சட்டம் இன்றிருக்குமா என்ற நிலை
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
16-பிப்-202015:36:27 IST Report Abuse
Indian  Ravichandran உண்மை உண்மை,
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
16-பிப்-202011:26:45 IST Report Abuse
Nallavan Nallavan மத்திய மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் காகிதமற்ற டிஜிட்டல் முறைக்கு மாறவேண்டும் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X