'விவசாயத்துக்கு வங்கிகள் கடன் வழங்குவதை கண்காணிப்போம்' ; நிர்மலா சீதாராமன்

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (16+ 29)
Share
Advertisement
Agriculture, Nirmala sitharaman, விவசாயி, நிர்மலா சீதாராமன், கண்காணிப்பு

புதுடில்லி : '' வங்கிகள், கிராமப்புறங்களில், விவசாயத்துக்கு சரியாக கடன் வழங்குகிறதா என்பதை, மத்திய அரசு கண்காணிக்கும்,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
டில்லியில், அவர் மேலும் கூறியதாவது:


நிதி ஒதுக்கப்படும்


மத்திய அரசு, 2020 - 21ம் நிதியாண்டுக்கு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், விவசாயத்துக்கு கடன் வழங்க ஒதுக்கப்படும் நிதியை, 11 சதவீதம் அதிகரித்து உள்ளது. அதனால், அடுத்த நிதியாண்டில், 15 லட்சம் கோடி ரூபாய் வரை, விவசாய கடன் வழங்க, வங்கிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த, 1.6 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.


அரசு உறுதி


விவசாயிகளின் வருமானத்தை, வரும், 2022க்குள் இருமடங்காக உயர்த்துவதில் அரசு உறுதியாக உள்ளது. அதனால், விவசாயத்துக்கு, வங்கிகள், சரியாக கடன் வழங்குகிறதா என்பதை, மத்திய அரசு கண்காணிக்கும். குறிப்பாக, கிராமப்புறங்களில் தீவிரமாக கண்காணிப்போம். விவசாய கடனுக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் பலன் அடைவர் என நம்புகிறேன். இதனால், விவசாய உற்பத்தியும் அதிகரிக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16+ 29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
16-பிப்-202019:10:41 IST Report Abuse
ஆரூர் ரங் Mirthika Sathiamoorthi -மக்கள் கூடுதலாக சம்பாதித்து டாஸ்மாக்கில் விடுகிறார்கள் .அது மது ஆலைகளை நடத்தும் பாலு ஜகத் கனிக்குப் போகிறது எட்டு வருஷமா ஆட்சி அதிகாரத்திலில்லாத போதும் அவர்களது சொத்து மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் பலமடங்கு அதிகரிப்பது வேறெப்படி ? ஆகமொத்தம் நாட்டின் வளர்ச்சி இவர்களுக்குப் போனால் மக்களிடம் வேறென்ன மிஞ்சும்? அதுக்கு மோதியும் நிர்மலா அம்மாவுமா காரணம் ?
Rate this:
Share this comment
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
16-பிப்-202023:06:19 IST Report Abuse
Mirthika Sathiamoorthiமக்கள் டாஸ்மாக்கில் விடுகிறார்கள்...யப்பா மக்களை பற்றி என்ன ஒரு பார்வை…? உங்களது கருத்தில் அடிக்கடி டாஸ்மாக் டாஸ்மாக் என சொல்லி கொண்டே இருக்குறீர்கள்..ஏன்? அரசு மது விற்பதாலா? ஏன் அரசு டாஸ்மாக் நடத்தவேண்டும்? என்னைக்காவது டோசிச்சிருக்கோமா? ரொம்ப நாளா அரசு மதுவிலக்கு கொண்டுவரவேண்டும் ஏன் சொல்லும் நாம்..படிப்படியாய் மதுக்கடைகள் மூடப்படும்ன்னு சொல்லி 500 கடைகளை 23.05.2016 இல் மூடியது.. அரசு அறிவிச்சப்புறம் இந்த அறிவிப்பை இப்போ குப்பையில் போட்டதே ஏன்? டாஸ்மாக்கை மூடவேண்டும் எனும் போராட்டம் இப்போ இல்லையே ஏன்? எதிர்க்கட்சிகள்...இவளவு எங்க ஆளும் மத்திய அரசின் தமிழக பிரதிநிதிகள் கூட டாஸ்மாக்கை பத்தி வாய்த்தொறக்காம கப்புச்சீப்புன்னு இருக்கிறப்ப..சொம்பு நீங்க மட்டும் டாஸ்மாக் டாஸ்மாக் என கூவுவது ஏன்? நீங்க சொல்லவர்ரது அதாவது நிதி அமைச்சருக்கு கொடுக்கும் அறிவுரை டாஸ்மாக்கை மூடினாள் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும் பொருளாதாரம் உயரும் அப்படித்தானே? எவ்வளவு பெரிய பொருளாதார சிந்தனை? அரசு மதுக்கடைகள் நடத்த கூடாது...சரி...அப்போ தனியார் மதுக்கடைகள் நடத்தலாம்..அங்கே போய் மக்கள் இன்னும் கூடுதலாய் சம்பாரிச்ச காசை கொடுத்த தப்பில்லை? ஒஹ்ஹ்...தனியார் மயம் அப்புடீங்கறதன் அருத்தம் இதுதானோ? மறுபடியும் மொதல்ல இருந்து ஏன் டாஸ்மாக் அரசுநடத்தவேண்டும்? என்ன காரணம்? மூடினாள் அரசுக்கு என்ன பிரச்னை வரும்? டாஸ்மாக் டாஸ்மாக் என கூவும் உங்களுக்கு குடிமகன்கள் பத்தி…. அப்புடியே ஆழமா போவோமா? இந்தியாவில் அடிக்கும் சரக்கு சாராயம், கல்லு, பீர், பாரின் சரக்கு...இப்போ அதிகம் குடிப்பவர் இருக்கும் மாநிலம் ஆந்திர அசாம் ஜார்கண்டு பீகார்…தமிழ்நாடு எத்தனையாவது இடம் தெரியுமா? ( நாம் மட்டும்தான் சம்பாரிச்ச காசை டாஸ்மாக்கில் கொடுக்கிறோம்.மத்த மாநிலம் அரசு மானியத்தில் சாப்பிடறானுங்க?) அதிகம் குடிப்பது எது தெரியுமா? சாராயம்..( ஒருத்தன் வருசத்துக்கு 11 .5 லிட்டர் குடிக்கிறான்….) இந்தியாவில் புறநகர் பகுதியில் உள்ளமக்களின் வருமானத்தை காலிசெய்வது சாராயம்...நமக்காவது அரசிடம் போகுது...மத்த பக்கத்தில் யாருக்கு காசுபோகுதுன்னு யாருக்குமே தெரியாது.. இந்தியாவில் 39 % தினம் குடிக்கிறான்..குறைந்த வருவாய் உள்ளவர்களின் மிகப்பெரிய சுகாதாரக்கேடு கள்ளச்சாராயம் ( 2009 குஜராத்தில் 135 பேர் செத்தானுங்க ) எப்புடியும் குடிக்கப்போறீங்க கண்டதை குடிச்சு சாகாம சுத்தமான குறைந்த விலையில் சரக்கு கொடுத்து அந்த காசை நலத்திட்டங்களுக்கு செலவுசெஞ்சா? டாஸ்மாக்...மதுவிலகிலிருந்து வலுக்கட்டாயமாய் தமிழகம் வெளியே வந்திருச்சு...காரணம் மத்தியில் ஆளும் அரசு...GST யில் இணைய கொடுத்த சலுகை சரக்குக்கு நோ GST ...வருமானம் முழுவதும் மாநில அரசுக்கு….அடுத்து என்ன பண்ணுச்சு? உணவுக்கு ஒதுக்கிய மானியத்தை கொறச்சாச்சு...68 000 கோடி...இலவச அரிசி, சத்துணவு வெற்றிக்கிரமாய் நடத்தும் நாம் காசில்லாமல் விவசாயிகளிடம் தானியம் வாங்குவது எப்படி? மாநில வளர்ச்சிக்கு மத்திய நிதிக்குழு பரிந்துரையின்படி மத்திய அரசு மாநிலங்களுக்கு கொடுக்கவேண்டிய நிதி 8 லட்சம் கோடி கொடுத்திருப்பது 6 லட்சம் கோடி, GST வரி வருவாய் மாநிலங்களுக்கு பாக்கி...மாநில அரசு வருமானத்துக்கு டாஸ்மாக் நடத்தாம? வேத பாடசாலையை நடத்துவான்? பாலு ஜகாத் மட்டும்தான் இந்தியாவில் பணக்காரன்? இப்போ ஒவொரு மாநில அரசும் மது விக்கலாம்ன்னு முடிவுபண்ணியிருக்கு தெரியுமா? நான் கேட்டது என்ன? 5 வருடத்தில் உங்களின் பொருளாதாரம் வளந்திருக்கா? சம்பளஉயர்வு போனஸ் வேலையின் நிரந்தரத்தன்மை...அடுத்த வேலைக்கான வாய்ப்பு இதுதான் ஒருளாதாரத்தை பேசும் GDP யோ பங்கு சந்தையோ இல்லன்னு சொன்னா... தயவு செய்து இன்னொருமுறை டாஸ்மாக்ன்னு சொல்லிட்டு சோம்பு தூக்கிட்டு வராதீங்க ப்ளீஸ்.......
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
17-பிப்-202009:09:24 IST Report Abuse
ஆரூர் ரங்பாலு ஜகத் கனி செய்யும் அண்ணாவழி சாராய வணிகம் பட்டி மூச்சே விடமாட்டீங்க ஏன்னா அதுதான் உங்க உயிர்மூச்சே .மதுவால் வரும் வருமானம் தொழுநோயாளி கையிலுள்ள வெண்ணை என அண்ணா சொன்னது நினைவிருக்கிறதா?...
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
16-பிப்-202012:20:19 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு மக்களை பரபரவாகவே வைத்து இருக்கனும் புதிதா சிந்திக்க விட கூடாது சிந்தித்தால் கேள்வி கேட்பார்கள் பொய்யை முதலீடு செய் சொன்ன புண்ணியவான் :: ஹிட்லர் செய்து கொண்டு இருப்பவர்கள் ??
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
16-பிப்-202012:15:30 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு பிரதமரின் ஒரு நாள் பாதுகாப்பு செலவு ::: ONE HOUR Rs.6.75 laks / one day Rs.1.62 cores :: இதை தான் மோடி மக்கள் வரி செலுத்துவதை தவிர்க்க கூடாது என்றார் பின்னர் அப்புறம் அவர் செலவை யார் ஈடு கட்டுவது
Rate this:
Share this comment
blocked user - blocked,மயோட்
16-பிப்-202013:41:37 IST Report Abuse
blocked userதீவிரவாதம் பெருகிப்போய் இருக்கிறது. ஆகவே பாதுகாப்பு அவசியம்... சிந்திக்கத்தெரியாத உன் போன்ற ஆட்கள் வேறு இடையில் கேள்வி கேட்டுக்கொண்டு.... தலையெழுத்து......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X