டிரம்பின் இந்திய பயணம் வெற்றிகரமாகும்: அமெரிக்க நிபுணர்கள் நம்பிக்கை| Dinamalar

டிரம்பின் இந்திய பயணம் வெற்றிகரமாகும்: அமெரிக்க நிபுணர்கள் நம்பிக்கை

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (7)
Share

வாஷிங்டன்: 'அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய பயணம் வெற்றிகரமாக அமையும்' என, தெற்காசியாவுக்கான அமெரிக்க நிபுணர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



latest tamil news



அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலினா டிரம்ப் ஆகியோர், இரண்டு நாள் பயணமாக, வரும், 24 - 25ல் இந்தியா வருகின்றனர். குஜராத் மாநிலம், ஆமதாபாதில் கட்டப்பட்டுள்ள, 'மோடேரா ஸ்டேடியம்' என்ற, உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தை, அதிபர் டிரம்ப் திறந்து வைக்கிறார்.

பின், அங்கு நடைபெறும் மாபெரும் கூட்டத்தில், பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும், லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில், வரலாற்று சிறப்புமிக்க உரை நிகழ்த்துவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்பின் பயணம் குறித்து, அந்நாட்டு நிபுணர்கள் பலர், கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, பன்னாட்டு நல்லுறவு பற்றி ஆய்வு செய்தவரும், நிபுணருமான ஆஷ்லி டெல்லிஸ் கூறியதாவது:டிரம்பின் இந்திய பயணத்தின் போது, இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக மோதல்கள் முடிவுக்கு வருமா என்பது குறித்து, உறுதியாக எதுவும் கூற முடியவில்லை.இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் இறுதி பெறும் என, இந்திய அரசு நம்பிக்கை தெரிவித்தாலும், அவை அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளை திருப்திபடுத்தாது. எனவே, அந்த ஒப்பந்தங்கள் நிறைவேறும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

ராணுவ தளவாட ஏற்றுமதியில், சில முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. டிரம்பின் இந்திய பயணம், மகிழ்ச்சியானதாகவும், வெற்றிகரமானதாகவும் அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



கசப்பை கொண்டு வருகிறார்: சிவசேனா
இந்தியா, சீனா உள்ளிட்ட, 24 நாடுகளை, அமெரிக்கா, வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கி, வளர்ந்த நாடுகள் பட்டியலில் சேர்த்துள்ளது. இதற்கான அறிவிப்பை, அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அலுவலகம், கடந்த வாரம் வெளியிட்டது.இதற்கு, சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான, 'சாம்னா'வில், கண்டன கட்டுரை வெளியாகி உள்ளது.

அதன் விபரம்:இந்தியாவை வளர்ந்த நாடு என, அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, துாய்மை மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்டவற்றில், நாம் இன்னும் நிறைய முன்னேற வேண்டி உள்ளது.இந்த அறிவிப்பின் மூலம், அமெரிக்காவிடம் இருந்து நமக்கு கிடைக்கும் வரிச் சலுகை மற்றும் மானியங்களை நாம் இழக்க நேரிடும். அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா வரும் நேரத்தில், நமக்கு இனிப்புக்குப் பதில், கசப்பான பாகற்காயை கொண்டு வருகிறார். பிரதமர் மோடி, இதை இனிப்பான செய்தியாக மாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X