'காஷ்மீர் பிரச்னையை நாங்களே சுமுகமாக தீர்த்துக் கொள்வோம்: அமைச்சர் ஜெய்சங்கர்

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (6) | |
Advertisement
முனீச்: ''காஷ்மீர் பிரச்னைக்கு, ஜனநாயக முறையில், இந்தியாவே சுமுகமாக தீர்வு காணும். இதில், மற்ற நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை,'' என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் முனீச் நகரில், சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடக்கிறது. சர்வதேச அளவில் நிகழும் பாதுகாப்பு குறித்த பிரச்னை, கொள்கைகள் குறித்து, இதில்

முனீச்: ''காஷ்மீர் பிரச்னைக்கு, ஜனநாயக முறையில், இந்தியாவே சுமுகமாக தீர்வு காணும். இதில், மற்ற நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை,'' என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.latest tamil newsஐரோப்பிய நாடான ஜெர்மனியின் முனீச் நகரில், சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடக்கிறது. சர்வதேச அளவில் நிகழும் பாதுகாப்பு குறித்த பிரச்னை, கொள்கைகள் குறித்து, இதில் விவாதிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க எம்.பி.,யான, லின்ட்சே கிரகாம், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்; அப்போது, லின்ட்சே கிரகாம் கூறியதாவது:இந்தியா, பொருளாதாரத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. எங்கள் நாட்டில் நிலவும் பிரச்னைகள் போலவே, உங்கள் நாட்டிலும் சில பிரச்னைகள் நிலவுகின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, ஜனநாயக வழிமுறைகளை கையாளுகிறீர்கள்.


latest tamil newsஆனால், காஷ்மீர் விவகாரத்தை பொறுத்தவரை, அதற்கு எப்போது தீர்வு ஏற்படும் என தெரியவில்லை. அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு ஜனநாயக நாடுகளும் இணைந்து, இந்த பிரச்னைக்கு சுமுக தீர்வு காண முடியும். காஷ்மீர் பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்பட்டால், ஜனநாயகத்தை பலப்படுத்தும் சிறந்த நடவடிக்கையாக, அது அமையும். இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கு பதில் அளித்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:காஷ்மீர் விஷயத்தில், அமெரிக்க எம்.பி., கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இந்த பிரச்னைக்கு, இந்தியாவே சுமுக தீர்வு காணும். அது, எந்த மாதிரியான தீர்வு என்பது, உங்களுக்கு தெரியும்.பிரச்னைகளை கையாளும் விஷயத்தில், ஐக்கிய நாடுகள் சபை, கடந்த காலங்களைப் போல் சரியாக இல்லை. சில பிரச்னைகள் உள்ளன; அவை சரி செய்யப்பட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் நான்சி பெலோசி, வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ ஆகியோரையும் சந்தித்த ஜெய்சங்கர், இரு தரப்பு உறவு குறித்து பேச்சு நடத்தினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
16-பிப்-202012:28:39 IST Report Abuse
Panneerselvam Chinnasamy சிம்லா ஒப்பந்தப்படி மூன்றாவது நாட்டினர் தலையீடு தேவை இல்லை. பாக்கிஸ்தான் சீன வசமுள்ள காஸ்மீர் பகுதிகளை ஒருபோதும் விட்டுத்தரப் போவதில்லை. பொதுவில் காஸ்மீர் மக்களை தூண்டிவிட்டு இந்தியாமீது மொத்த பழியையும் போட்டு தப்பித்துக்கொள்ள பார்க்கிறது பாக்கிஸ்தான்.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
16-பிப்-202011:33:21 IST Report Abuse
Aarkay Excellent Sport this brave face forever and in every forum Let's not yield to anyone's pressure tactics and take India forward We, the majority of the people are with the present government and its efforts to undo the wrongs of the previous congress governments. Never ever stop this cleansing operation of Indian politics
Rate this:
Cancel
Ramesh - Bangalore,இந்தியா
16-பிப்-202009:59:57 IST Report Abuse
Ramesh Please watch this person discussion with western group which is there in youtube...Mind Blowing answers
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X