வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹுப்பள்ளி:புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காஷ்மீரை சேர்ந்த மூன்று பொறியியல் மாணவர்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் போட்ட சம்பவம், கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு,
காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த சி.ஆர். எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் வீரர்களுக்கு, நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து, மூன்று காஷ்மீர் இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் போட்ட, 'வீடியோ' நேற்று சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவைப் பார்த்த, ஹுப்பள்ளி கே.எல்.இ., கல்லுாரி முதல்வர் பசவராஜ், மூன்று பேரும் தங்கள் கல்லுாரியில், படித்து வருவதை அறிந்தார். உடனே அவர்களை வரவழைத்து, எச்சரித்து அனுப்பினார். அவர்கள், காஷ்மீர் சோபியான் பகுதியை சேர்ந்தவர்கள்.இதற்குள்,
இவ்விஷயம் மாநிலம் முழுவதும் பரவி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து,
கல்லுாரி நிர்வாகம் சார்பில், கோகுலம் சாலை காவல் நிலையத்தில் புகார்செய்யப்பட்டது.
மூவரும் கல்லுாரியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், மாணவர்கள் தங்கியிருந்த கல்லுாரி விடுதிக்கு சென்ற போலீசார், அவர்களை, நேற்று மதியம் கைது செய்தனர். காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லும் போது, பஜ்ரங்தள் உட்பட ஹிந்து அமைப்பினர், மாணவர்களை தாக்கினர்.விஷயம் பெரிதாவதை உணர்ந்த
தார்வாட் போலீஸ் கமிஷனர் திலீப், கோகுலம் சாலை காவல் நிலையத்துக்கு சென்று,
மாணவர்களிடம் விசாரித்தார்.
இது குறித்து, திலீப் கூறுகையில், ''மூவர் மீதும் தேச துரோக சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ, தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. முழு விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்.அவர்களின் பின்னணி என்ன. அவர்களை யாராவது துாண்டி விட்டனரா, என்ற கோணத்தில் விசாரிக்கிறோம்,'' என்றார்.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியமாணவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேச துரோக செயல்களை ஒரு போதும்சகித்து கொள்ள முடியாது.
பிரஹலாத் ஜோஷி, மத்திய அமைச்சர், பார்லிமென்ட் விவகார துறை
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE