பிரதமர் ஆபீசில் இருந்து வந்தது உத்தரவு: கோவையில் மீட்கப்பட்டது, ரிசர்வ் சைட் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் ஆபீசில் இருந்து வந்தது உத்தரவு: கோவையில் மீட்கப்பட்டது, 'ரிசர்வ் சைட்'

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (25)
Share
பிரதமர், கோவை, உத்தரவு, ஆக்கிரமிப்பு

இந்த செய்தியை கேட்க

கோவை:கோவை மாநகராட்சியில், பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தை ஆக்கிரமித்து அமைத்திருந்த கூடாரம், பிரதமர் மோடி அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவை தொடர்ந்து, நேற்று அகற்றப்பட்டது.கோவை மாநகராட்சி, 36வது வார்டு, காவாலியர் ஜி.கே.டி., நகர், 8.22 ஏக்கர் பரப்பளவு கொண்டது; 91 மனைகள் உள்ளன.

பொது ஒதுக்கீடாக, பூங்காவுக்கு பகுதி-1, 2 என, இரு இடங்களில், 83 சென்ட் ஒதுக்கப்பட்டது. பொது ஒதுக்கீடு இடம் என அடையாளப்படுத்தி, மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. பூங்காவுக்கு ஒதுக்கிய, 52 சென்ட் இடத்தில் (பகுதி-1), 2,500 சதுரடியை ஆக்கிரமித்து, சிலர் கூடாரம் அமைத்து, இறகுபந்து விளையாட பயன்படுத்தி வந்தனர். விளையாடுவோரிடம் கட்டணமும் வசூலிக்கப்பட்டது. 'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்பை உறுதி செய்த மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.ஆளுங்கட்சி தரப்பில் அழுத்தம் கொடுத்ததால், ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் தயக்கம் காட்டினர். இதையடுத்து, பிரதமர் மோடி அலுவலகத்துக்கு அப்பகுதி மக்கள் கடிதம் அனுப்பினர். அங்கிருந்து, மனுதாரரின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுத்து, பதில் அறிக்கை அனுப்ப, தமிழக தலைமை செயலருக்கு உத்தரவிடப்பட்டது.தலைமை செயலர் அறிவுறுத்தியதை தொடர்ந்து, கோவையில் ஆக்கிரமிப்பில் இருந்த, 'ரிசர்வ் சைட்' நேற்று அகற்றப்பட்டது.


latest tamil news




மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில்,''ஜி.கே.டி., நகரில் பூங்காவுக்கான, 52 சென்ட் இடத்தில், 2,500 சதுரடியை ஆக்கிரமித்து, அப்பகுதியினர் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைத்திருந்தனர். ஆக்கிரமிப்பை அகற்ற அளித்த அழுத்தத்தை தொடர்ந்து, கூடாரத்தை அகற்றியுள்ளனர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும்,'' என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X