பொது செய்தி

தமிழ்நாடு

சிஏஏ.,க்கு எதிரான போராட்டம்: கண்காணிக்க 6 அதிகாரிகள்

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (111)
Share
Advertisement
caa, tamilnadu, police, demonstrate,  dgp, tripathy,

இந்த செய்தியை கேட்க

சென்னை: தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர்., க்கு எதிரான போராட்டத்தை கண்காணிக்கவும்,கட்டுப்படுத்தவும் 6 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து டிஜிபி திரிபாதி பிறப்பித்த உத்தரவில்,
குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,க்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் 6 பேர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news


அதில்
மதுரை - அபய்குமார் சிங்
நெல்லை - மகேஷ்குமார் அகர்வால், முருகன்
தேனி - பாஸ்கரன்
தூத்துக்குடி - மகேந்திரன்
திண்டுக்கல் -ஜி.ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
இந்த அதிகாரிகள் ஒருங்கிணைத்து சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., செயல்படுவர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


ஆலோசனை:

இந்நிலையில், சிஏஏ, என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,க்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் குறித்து டிஜிபி திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகள், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனை சுமார் 50 நிமிடங்கள் நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (111)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
17-பிப்-202011:32:39 IST Report Abuse
Nallavan Nallavan தேவைப்பட்டால் அடக்குமுறையைக் கையாண்டு அமல்படுத்துவதில் தவறு காண முடியாது ..... வன்முறையைத் தூண்டுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒதுக்குங்கள் ..... களையெடுங்கள் ..... ஜனநாயக நாட்டில் சட்டத்திற்கு அடுத்தபடிதான் யாருமே ......
Rate this:
Cancel
mohandas - sydney,ஆஸ்திரேலியா
17-பிப்-202007:29:42 IST Report Abuse
mohandas என்னய்யா கொடுமை இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. முஸ்லீம் நாடுகளில் உள்ள சிறுபான்மையினரை காப்பதே நோக்கம். இந்த சட்டத்தில் இந்தியன் அனைவரும் பாதுகாக்கப்படுவர். சிறுபான்மை இனத்தவரை காக்க வேண்டிய முஸ்லிம்ஸ்களும் அதன் அரசாங்கமும் முஸ்லீம் அல்லாத பலரை சொல்லமுடியுமா துன்பத்தில் தள்ளுவது புரியலையா. வேண்டுமென்றே மோடி நேர்மை அரசியலை சாய்க்க நெறிகெட்ட அரசியல் நடக்கிறது. நன் வெளி நாட்டில் உள்ளேன் தவிக்கிறது மனசு இஸ்லாமியர்களின் நல்லவர்களே வெளியில் வாருங்கள் உண்மையை சொல்லுங்கள். வெள்ளூர்இஇப்ராஹீம் அருமையான சொற்பொழிவு கேளுங்கள் மனம் திருந்துங்கள்
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
17-பிப்-202000:21:08 IST Report Abuse
Vijay D Ratnam நாட்டின் பாதுகாப்பு குறித்த சட்டம் முறைப்படி பாராளுமன்றத்தில் பாஸாகி, ராஜ்யசபாவில் பாஸாகி, நாட்டின் ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்த சட்டம். ஆளும் கட்சிக்கு கெட்டபெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரேயொரு காரணத்துக்காக மைனாரிட்டி வாக்குகளை அண்டி பொழப்பு நடத்தும் அரசியல்வியாதிகளால் உசுப்பிவிடப்பட்டு CAA வுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்படும் அயோக்கியத்தனம், பொறுக்கித்தனம். ரவுடித்தனம், எல்லை மீறி போய்கொண்டு இருக்கிறது. போலீஸ் மிக மிக மிக மென்மையான போக்கை கடைபிடிக்கிறது. தூத்துகுடில ஏறிய மாதிரி டெம்போ ட்ரைலர் மீது மஞ்சள் டீ ஷர்ட் பயில்வான்களை ஏற்றினால் தற்குறி கூட்டம் பின்னங்கால் பிடரியில் அடிக்க தலைதெறிக்க ஓடிடும். விட்டால் இனி எல்லாத்துக்கும் இது போன்ற ரவுடித்தனம் அரங்கேறும். பாஜக மீது கோபம் இருக்கத்தான் செய்யும். டீமானிடேஷன் செய்ததன் மூலம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஃபைனான்ஸ் சமாச்சாரத்துக்கு சம்மட்டி அடி விழுந்திருக்கிறது. ஹவாலாக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தினம் தினம் விமான நிலையங்களில் தங்கக்கடத்தல் கும்பல்கள் விரட்டி விரட்டி வேட்டையாட படுகிறார்கள். அமித்ஷா வேறு இரண்டு நாட்களுக்கு முன்பு போதை பொருள் கும்பல்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க போவதாக சொல்கிறார். உசுப்பிவிடும் நபர்களுக்கு பாஜக மீது கோபம் இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X