சிஏஏ.,க்கு எதிரான போராட்டம்: கண்காணிக்க 6 அதிகாரிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிஏஏ.,க்கு எதிரான போராட்டம்: கண்காணிக்க 6 அதிகாரிகள்

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (111)
Share
caa, tamilnadu, police, demonstrate,  dgp, tripathy,

இந்த செய்தியை கேட்க

சென்னை: தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர்., க்கு எதிரான போராட்டத்தை கண்காணிக்கவும்,கட்டுப்படுத்தவும் 6 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து டிஜிபி திரிபாதி பிறப்பித்த உத்தரவில்,
குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,க்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் 6 பேர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news


அதில்
மதுரை - அபய்குமார் சிங்
நெல்லை - மகேஷ்குமார் அகர்வால், முருகன்
தேனி - பாஸ்கரன்
தூத்துக்குடி - மகேந்திரன்
திண்டுக்கல் -ஜி.ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
இந்த அதிகாரிகள் ஒருங்கிணைத்து சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., செயல்படுவர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


ஆலோசனை:

இந்நிலையில், சிஏஏ, என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,க்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் குறித்து டிஜிபி திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகள், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனை சுமார் 50 நிமிடங்கள் நடந்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X