அரசின் உத்தரவை மீறி 14 சீனர்கள் அனுமதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசின் உத்தரவை மீறி 14 சீனர்கள் அனுமதி

Added : பிப் 16, 2020 | கருத்துகள் (38)
Share
கொரோனா, கோவியட்-19. சீனர்கள்,  தூத்துக்குடி, துறைமுகம்

தூத்துக்குடி: சீனர்கள், 14 பேருடன், தூத்துக்குடி துறைமுகம் வந்த கப்பலுக்கு, மத்திய அரசின் எச்சரிக்கையையும் மீறி, அதிகாரிகள் அனுமதியளித்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

'கோவிட் - 19' பாதிப்பு காரணமாக, சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணியருக்கு, பல்வேறு நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனர்கள், 14 பேருடன், பனாமா சரக்கு கப்பல், 'ரூயி' தூத்துக்குடி, வ.உ.சி., துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



ஜன., 15ம் தேதி, சீனாவின் ஷியாமென் துறைமுகத்திற்கு சென்ற கப்பல், 19ம் தேதி, ஷாங்காய், 28ம் தேதி, தாய்ஹாங் துறைமுகங்களுக்கு சென்றுவந்துள்ளது. கப்பலின் மாலுமி, வாங்க் லியாங்மிங் உள்பட, சீனர்கள், 14 பேரும், மியான்மர் நாட்டை சேர்ந்த நான்கு பேரும், கப்பலில் உள்ளனர்.இந்த கப்பல், 13ம் தேதி, தூத்துக்குடி துறைமுகம் வந்துள்ளது. அதற்கு முன்னதாக, 11ம் தேதியே, மத்திய கப்பல்துறை இயக்குநர் அரவிந்த் சவுத்ரி, இந்தியாவில் உள்ள, அனைத்து துறைமுகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், 'சீனாவிற்கு சென்று வரும் கப்பல் ஊழியர்களையோ, சீன நாட்டினரையோ, எந்த துறைமுகத்திலும் நிறுத்துவதற்கோ, கப்பலில் இருந்து வெளியே செல்லவோ அனுமதிக்ககூடாது' என, குறிப்பிட்டுள்ளார்.இருப்பினும், பிப்.,13ம் தேதி வந்த, 'ரூயி' கப்பலை, தூத்துக்குடி துறைமுகத்திற்குள், அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.

கப்பலில் வந்தவர்களுக்கு, 'கோவிட் - 19' சோதனை செய்யப்பட்டதா என்பதும், தெரியவில்லை. கப்பலில் வந்த சீனர்கள் வெளியே சென்றுள்ளார்களா என்பது குறித்தும், துறைமுக அதிகாரிகளுக்கு தெரியவில்லை.துறைமுக அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால், தமிழகத்திலும், 'கோவிட் - 19' பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X