மக்கள் எங்களிடம் கேட்ட கேள்வி...: மனிஷ் சிசோடியா

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
Delhi, DeputyCM, ManishSisodia, AAP, AamAadmi, Politics, டில்லி, துணைமுதல்வர், மனிஷ்சிசோடியா, ஆம்ஆத்மி, அரசியல், ஜாதி, மதம்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: 'நாங்கள் அரசியலுக்கு வரும்போது, ஜாதி, மதத்தை பற்றி அரசியலில் நிலைக்க முடியுமா என மக்கள் கேட்டனர்' என ஆம் ஆத்மி கட்சி மூத்த நிர்வாகி மனிஷ் சிசோடியா கூறியுள்ளார்.

டில்லியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம்ஆத்மி 62 இடங்களில் வென்று, தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது. முதல்வராக, அரவிந்த் கெஜ்ரிவாலை, இன்று பதவியேற்க உள்ளார்.


latest tamil news


முன்னதாக, சிசோடியா அளித்த பேட்டி: நாங்கள் முதன்முதலில் அரசியலில் நுழைந்தபோது, இந்த நாட்டில் அரசியல் என்பது ஜாதி, மதத்தை பற்றியது எனவும், இதில் நீங்கள் எப்படி நிலைக்கப் போகிறீர்கள் எனவும் மக்கள் எங்களிடம் கேட்டனர். ஆனால், இப்போது நாங்கள் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்க இருக்கிறோம். கெஜ்ரிவாலை முதல்வராக தேர்வு செய்த அதே பொதுமக்களை, எதிர் போட்டியாளர்கள், மோசமாக பேசியது தான் இதற்கு காரணம். மற்ற கட்சிகளை போல நாங்களும் தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். ஆனால் கெஜ்ரிவால் அளித்த 10 உத்தரவாதங்களை தவிர்த்து மற்ற அனைத்தும் பொய் என மக்கள் முடிவெடுத்துள்ளனர். இந்த வாக்குறுதிகளை உறுதியாக நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kundalakesi - Coimbatore,இந்தியா
17-பிப்-202008:04:56 IST Report Abuse
Kundalakesi Delhi budget is surplus budget comparing deficit budget in other states. This is because AAp has made more people to file taxes. They have surplus amount (tax paid by people) and they're giving it back to people. Please read facts fully before commenting. இலவசமாம்.. டுபாக்குர் commentators
Rate this:
Share this comment
Cancel
HSR - MUMBAI,இந்தியா
16-பிப்-202023:12:51 IST Report Abuse
HSR அவ்வளவு இலவசம் குடுக்குறேண்ணு அல்வா குடுத்தும் 26 தொகுதிகளில் 100ஓட்டு 12 தொகுதிகளில் 1000 ஓட்டு..இதுதாண்டா நீங்க ஆட்சிக்கு வந்த லட்சணம்..டில்லி மக்கள் மீண்டும் 5ஆண்டு அவதி.. அவ்வளவுதான் சொல்ல முடியும்.இங்க எடப்பாடி ஆட்சி எவ்வளவோ மேல்..
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
16-பிப்-202015:03:06 IST Report Abuse
Ray தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பமில்லாத வாழ்வும் துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய் - அபிராமி அந்தாதி ஆம் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய் என்று சொல்லி கோணாத கோலும் வேண்டுகிறார் பட்டர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X