காஷ்மீர் யாருக்கு? கூகுள் இரட்டை வேடம்| Kashmir marked ''disputed'' on Google Maps for people outside India | Dinamalar

காஷ்மீர் யாருக்கு? கூகுள் இரட்டை வேடம்

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (41)
Share
kashmir, googlemaps, கூகுள், காஷ்மீர், கூகுள்மேப்ஸ்,

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன் : வேறு நாடுகளில் இருந்து, இந்திய வரைபடத்தை பார்க்கும் போது, காஷ்மீர் பகுதிகள் சர்ச்சைக்குரிய இடம் என சிவப்பு நிற கோடுகளுடன் கூகுள் மேப்ஸ் காட்டுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் வெளியிட்ட செய்தி: உலகின் மிகப்பெரிய இணைய தேடு தளமான 'கூகுள்' நிறுவனத்தின் 'கூகுள் மேப்ஸ்' வழியாக, இந்திய வரைபடத்தை, வேறு நாடுகளில் இருந்து பார்க்கும் போது, ஜம்மு - காஷ்மீர் பகுதிகள் சர்ச்சைக்குரிய இடம் என, சிவப்பு நிற கோடுகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. அதையே, இந்தியாவில் இருந்து பார்க்கும் போது, அப்பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என, இருவேறு தகவல்களை தெரிவிக்கிறது. இது காஷ்மீருக்கு மட்டுமல்ல, பல்வேறு நாடுகளின் எல்லைகளும் திருத்தி வரையப்பட்டுள்ளது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும் போது, சர்ச்சைக்குரிய பகுதிகள் மற்றும் அம்சங்கள், நியாயமாக சித்தரிப்பதற்காக கூகுள் ஒருநிலையான உலகளாவிய கொள்கையை கொண்டிருக்கிறது. சர்ச்சைக்குரிய அல்லது உரிமை கோரும் நாடுகள், அதன் உலகளாவிய களத்தில் உரிமை கோரல்களை கூகுள் காட்டுகிறது. இது எந்த ஒரு தரப்பும் எடுத்துள்ள நிலைப்பாட்டை அங்கீகரிக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ இல்லை. உள்ளூர் பிரதேசத்திற்கு ஏற்ப மொழிபெயர்க்கப்பட்ட வரைபட தயாரிப்புகள், உள்ளூர் சட்டங்களுக்கு ஏற்றபடி அந்த நாட்டின் நிலையை எடுத்து காட்டுகின்றன என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X