பொது செய்தி

இந்தியா

ரிக்சா தொழிலாளி மகள் திருமணம்: பிரதமர் வாழ்த்து

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

வாரணாசி: வாரணாசியில் வசிக்கும் ரிக்சா தொழிலாளி ஒருவர் திருமண அழைப்பிதழை பார்த்த பிரதமர் மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.



latest tamil news




உ.பி., மாநிலம் வாரணாசி தொகுதியில் இருந்து பிரதமர் மோடி, லோக்சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் உள்ள டோம்ரி கிராமத்தை சேர்ந்தவர் மங்கள் கேவத், ரிக்சா ஓட்டும் தொழிலாளி. கடந்த 12ம் தேதி தனது மகள் திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக அழைப்பிதழை தனது தொகுதி எம்.பி.,யான பிரதமருக்கு வழங்க எண்ணி, அவரது அலுவலகத்தில் வழங்கினார். இதன் பின்னர், சிறிது நாட்கள் கழித்து, கேவத்திற்கு கடிதம் ஒன்று வந்தது. அதனை பார்த்த அவருக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த கடிதத்தில், மகளின் திருமணத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


latest tamil news



இது தொடர்பாக கேவத் கூறுகையில், முதல் திருமண அழைப்பிதழை பிரதமருக்கு அனுப்பினேன். அழைப்பிழை, டில்லி சென்று பிரதமர் அலுவலகத்தில் வழங்கினேன். பின்னர் 8ம் தேதி பிரதமர் மோடியிடம் இருந்து வாழ்த்து தெரிவிதது கடிதம் வந்தது. சமூகத்தின் கடைசி மனிதரையும் பிரதமர் எவ்வாறு மதிக்கிறார் என்பதற்கு இந்த கடிதமே சாட்சி, என்றார்.


latest tamil news



கேவத் மனைவி ரேணு தேவி கூறுகையில், உ.பி., வரும் பிரதமரை சந்திக்க விரும்புகிறோம். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், எங்களது குடும்பம் சந்திக்கும் பிரச்னைகளை பற்றி அவரிடம் தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
18-பிப்-202005:23:44 IST Report Abuse
Ray கடிதம் சரி மொய் கரன்சி ஏதாவது உண்டா
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
16-பிப்-202014:39:18 IST Report Abuse
Nallavan Nallavan பாராட்டலாம் ...... தனது தொகுதியைச் சார்ந்த நபர் என்றில்லை, வேறு யார் அழைத்திருந்தாலும் பிரதமர் அலுவலகம் வாழ்த்துத் தெரிவித்திருக்கும் .....
Rate this:
Share this comment
Cancel
16-பிப்-202012:53:33 IST Report Abuse
நக்கல் மோடிக்கு திருமண அழைப்பிதழ் அனுப்பி அதற்கு அவர் பதில் போட்டாலே பெருசா பேசுறாங்க... ஆனா, நான் வீடு வீடாப்போய் ரொட்டி தின்னேன், ATM வரிசையில் நின்றேன், என்ன மட்டும் கிண்டல் பண்ணராங்க... இது சரி இல்லை....
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-பிப்-202016:09:58 IST Report Abuse
தமிழ்வேல் உண்மை, அது பத்திரிக்கையைப் பொறுத்தது.. // மோடிக்கு திருமண அழைப்பிதழ் அனுப்பி அதற்கு அவர் பதில் போட்டாலே பெருசா பேசுறாங்க... //...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X